/indian-express-tamil/media/media_files/2025/09/09/parthiban-on-citizen-movie-ajith-kumar-tamil-news-2025-09-09-22-03-12.jpg)
"இயக்குநர் சரவண சுப்பையா இயக்குநராக திரையுலகில் அறிமுகமானாலும் தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்" என்று பார்த்திபன் கூறினார்.
இயக்குநர் சரவண சுப்பையா இயக்கத்தில் கடந்த 2001-ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சிட்டிசன்’. இந்த படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரிலீஸான நேரத்தில் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கலவையான விமர்சனத்தை பெற்றது.
அதன் பின்னர் ஒவ்வொரு முறையும் தொலைக்காட்சிகளில் இப்படம் வெளியாகும் பொழுது ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். அதிலும், அத்திப்பட்டி என்ற பெயர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அத்திப்பட்டி கிராமத்தின் வாழ்க்கை வரலாறும், பிளாஸ்பேக்கில் அஜித்- மீனாவின் நடிப்பும் தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது பெரிதும் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் போலீஸாக வரும் நக்மாவின் நடிப்பு ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது. அவர் நாயர் என்று கூப்பிடும் ஸ்டைல் பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. ‘சிட்டிசன்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஐ லைக் யூ’ பாடல், ‘மேற்கே விதைத்த சூரியனே’ போன்ற பாடல்கள் தற்போது வரை ரசிகர்கள் மனதில் அழியாத தடமாய் மாறியுள்ளது.
இந்த படத்தில் நடிகர் அஜித் பல வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார். காலம் கடந்து பாராட்டப்பட்ட படங்களில் ‘சிட்டிசன்’ படமும் ஒன்று. இந்நிலையில் சிட்டிசன் படத்தை தான் நிராகரித்ததாக இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “சரவண சுப்பையா எனக்கு ‘சிட்டிசன்’ படம் குறித்து சொல்லும் போது நடிகர் அஜித் அந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். அப்பறம் அஜித் அந்த படத்தில் நடித்தார். நான் ஏன் அவ்வாறு சொன்னேன் என்றால் பொதுவாக நான் ஒரு இயக்குநர். நான் ஒரு படத்திற்கு நடிகர்களை எப்படி தேர்வு செய்வேனோ அப்படி தான் சொன்னேன்” என்றார்.
இயக்குநர் சரவண சுப்பையா இயக்குநராக திரையுலகில் அறிமுகமானாலும் தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல திரைப்படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சரவண சுப்பையா, ‘சிட்டிசன்’ பட கதையை அஜித்திடம் கூறி பல நாட்களாகியும் எந்த பதிலும் வராததால் நடிகர் விஜய்யிடன் கதையை கூற சென்றேன். அப்போது நடிகர் அஜித் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்ததால் அவரை வைத்து ‘சிட்டிசன்’ படத்தை எடுத்தேன், இல்லை என்றால் இந்த கதையை நடிகர் விஜய்யிடம் கூறியிருப்பேன் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.