பார்திபன் தனது திருமண வாழ்க்கை குறித்தும், விவகாரத்து ஏன் ஏற்பட்டது என்பது குறித்தும் சமீபத்தில் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது.
நடிகர் மற்றும் இயக்குநரான பார்த்திபன் நடிகை சீதாவை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு பெண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் அவரும் சீதாவும் முன்பே பிரிந்துவிட்டனர்.
சமீபத்தில் டீஸ் படம் தொடர்பாக புரோமோஷன் செய்ய பேட்டி கொடுத்தபோது பார்த்திபன் மனம் திறந்து பேசி உள்ளார். நான் வாழ்க்கையை அதிகபடியான காதலை உணர்ந்தது சீதாவிடம்தான். அவர் பிரிந்து வாழலாம் என்று சொன்னபோதே நான் புரிந்துகொண்டிருக்க வேண்டும். அவர் விவாகரத்து கேட்டபோது நான் தான் வேண்டாம் என்று சொன்னேன். அப்போது எனக்கு பக்குவம் இல்லை. இப்போது இருந்த பக்குவம் அப்போது இருந்திருக்கலாம். அவர் திருமணத்திற்கு பிறகு நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டபோது நான் அனுமதிக்கவில்லை. குடும்பம் பிரிந்து விடும் இதனால் என்று வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். அப்படி நான் செய்திருக்க கூடாது.
கணவன் மனைவிக்குள் பிடிக்கவில்லை என்று பிரிந்து வாழ வேண்டும். குழந்தை பெற்றுகொள்வதற்கு முன்பே பிரிந்து விடுவது நல்லது என்று எனது அனும்பவத்தில் தெரிந்துகொண்டேன். சீதா மீது எப்போதும் அதிக அளவில் காதல் இருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூட நான் நினைத்ததில்லை. அவர் நல்ல நடிகையாக வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. “ என்று அவர் கூறினார்.