விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கு: விஜய் குறித்து பார்த்திபன் சூசகம்

இட்லி கடை டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், ரசிகர்கள் "டி.வி.கே." (தமிழக வெற்றிக் கழகம்) என்று கோஷமிட்டதைக் கண்டு, "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கு" என்று நடிகர் விஜய் குறித்து சூசகமாகப் பேசினார்.

இட்லி கடை டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் பார்த்திபன், ரசிகர்கள் "டி.வி.கே." (தமிழக வெற்றிக் கழகம்) என்று கோஷமிட்டதைக் கண்டு, "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கு" என்று நடிகர் விஜய் குறித்து சூசகமாகப் பேசினார்.

author-image
WebDesk
New Update
tvk parthiban

விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம்; ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கு: விஜய் குறித்து பார்த்திபன் சூசகம்

தனுஷ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் இட்லி கடை. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். எம்மாதிரியான கதைக்களத்துடன் இப்படம் இருக்கும் என மக்களிடம் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக இருக்கிறது.

Advertisment

தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படத்தின் டிரைலர் கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் 
வெளியிடப்பட்டது. திறந்தவெளி இடத்தில் நடைபெற்றதால் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். டிரைலர் வெளியீடு நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகை நித்திய மேனன், சத்யராஜ், பார்த்திபன், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ், பாடகர் சுவேதா மோகன், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பார்த்திபன், தனது பட அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ரசிகர்கள் திடீரென "டி.வி.கே., டி.வி.கே." (தமிழக வெற்றிக் கழகம்) என கோஷமிட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பார்த்திபன், "நீங்கள் நினைப்பதை அப்படியே சொல்கிறேன்" என்று கூறி, பின்னர் "விஜயம் யார் வேண்டுமானாலும் செய்யலாம், ஜெயம் உங்கள் கையில்தான் இருக்கு" என்று நடிகர் விஜய் குறித்து சூசகமாகப் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இந்த சுவாரசியமான உரையாடல், 'இட்லி கடை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Entertainment News Tamil

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: