2003-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான இவரே அட்டகாடு என்ற படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் நடிகை பிரியா மணி. தொடர்ந்து 2004-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கண்களால் கைது செய் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
Advertisment
அதன்பிறகு பாலு மகேந்திரா இயக்கத்தில் தனுஷூடன் அது ஒரு கனாக்காலம் என்ற படத்தில் நடித்த பிரியா மணி, ஜித்தன் ரமேஷூடன் மது என்ற படத்தில் நடித்திருந்தார்.
Advertisment
Advertisements
2007-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்த பருத்தி வீரன் படம் பிரியாமணிக்கு தமிழில் பெரிய அடையாளத்தை கொடுத்தது. இந்த படத்திற்காக பிரியாமணி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்றிருந்தார்.
அதனைத் தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். கடைசியாக ராவணன் படத்தில் நடித்த பிரியாமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் வெளியான கஸ்டடி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது குயிண்டன் கேங் என்ற தமிழ் படத்தில் நடித்து வரும் பிரியா மணி தெலுங்கு மலையாளம், கன்னடம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.
திரைப்படம் மட்டுமல்லாமல் வெப் தொடரில் நடித்து வரும் பிரியாமணி தி ஃபேமிலி மேன் ஹிஸ் ஸ்டோரி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பிரியாமணி அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பாரம்பரியமான சேலையில் மாடர்னாக அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“