தனது ஆவணப்படத்திற்கு என்.ஓ.சி கொடுக்காத தனுஷ் குறித்து கடுமையான விமர்சித்து நயன்தாரா பதிவிட்ட அறிக்கைக்கு தான் ஆதரவு அளித்தது ஏன் என்பது குறித்து நடிகை பார்வதி திருவோத்து விளக்கம் அளித்துள்ளார்.
Read In English: Parvathy reveals why she stood with Nayanthara in legal battle with Dhanush: ‘I know what it feels like to be unsupported’
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, கடந்த 2022-ம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனம், நயன்தாராவின் வாழ்க்கை வரலாறு என்ற பெயரில் ஆவணப்படமாக வெளியிட்டது. இதில், தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நயன்தாரா விஜய் சேதுபதி இணைந்து நடித்த நானும் ரவுடி தான் படத்தின் காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
நானும் ரவுடி தான் படத்தை தயாரித்த தனுஷ் தனது அனுமதி இல்லாமல் இந்த படத்தின் காட்சிகளை பயன்படுத்திவிட்டதாக கூறி ரூ10 கோடி நஷ்டஈடு கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனால் அதிர்ச்சியான நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து தனுஷ் குறித்து கடுமையான விமர்சனங்களுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில்,தனுஷ் தன் மீதும், தனது கணவர் விக்னேஷ் சிவன் மீதும் தனிப்பட்ட வெறுப்பு கொண்டதாக கூறியிருந்தார்.
மேலும், நானும் ரவுடி தான் படத்தின் பாடல்களைப் பயன்படுத்த தடையில்லாச் சான்றிதழ் வழங்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த அறிக்கைக்கு தனுஷ் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதில் அறிக்கையும் வெளியாகவில்லை. அதே சமயம், தனுஷூடன் நடித்த நடிகைகள் சிலர் நயன்தாராவின் அறிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். அந்த வகையில், பார்வதி திருவோத்து நயன்தாராவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.
இது குறித்து, மனோரமா நியூஸுக்கு பார்வதி திருவோத்து அளித்த பேட்டியில், நடிகை நயன்தாராவைப் போல சுயமாக உருவாக்கிய நடிகை ஒருபோதும் யாருக்கும் எதிராக சீரற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்க மாட்டார். ஆதரவை கொடுப்பதற்கு நீண்டகாலம் நான் எடுத்துக்கொள்ள மாட்டேன். ஒரு நிலைப்பாட்டை எடுக்கவும் எனது ஆதரவை வழங்கவும் எனக்கு கூடுதல் நேரம் தேவையில்லை. பதிவை பார்த்ததும் உடனே ஷேர் செய்ய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது.
நயன்தாரா, தானே உருவான பெண், லேடி சூப்பர் ஸ்டார், தன் தொழிலை தானே கட்டியெழுப்பியவர். இப்படி ஒரு திறந்த கடிதம் எழுத வேண்டி வந்தது. அவர் நோக்கமில்லாமல் பேசுகிறவர் அல்ல என்பதை நாங்கள் அனைவரும் அவளை அறிவோம். அவர் தனது அனுபவங்களைப் பற்றி மூன்று பக்கங்களில் எழுதினார், அதனால்தான் இது ஒரு திறந்த கடிதம் என்று அழைக்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.
இது ஒரு உண்மையான பிரச்சினை. நயன்தாராவை ஆதரிக்கும் அனைவரும் அவரது கடிதத்தில் உள்ள உண்மையை நம்புகிறார்கள்.
ஒரு கட்டத்தில், நாம் அனைவரும் நம்மை மற்றவர்களிடம் காண்போம். இதுவும் ஒரு காரணம். நயன்தாரா ஆதரவு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். நான் அதை கடந்து வந்திருக்கிறேன். ஒரு நபரை எந்தளவுக்கு மாற்ற முடியும் என்பதை நான் அறிவேன். அப்படிச் சிந்தித்துப் பார்த்தால், அந்த மக்களுக்காக நான் எப்போதும் நிற்பேன், குறிப்பாக அவர்கள் பெண்களாக இருந்தால் எனது ஆதரவு எப்போதும் இருக்கும் என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.