”அருவருப்பான கருத்து இது”… கேரள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறிய பார்வதி!

இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக கூறிய அவர், இது போன்ற மோசமான கருத்துகளை பதிவு செய்த பாபு பதவி விலக வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார். 

Parvathy Thiruvothu resigns from AMMA

Parvathy Thiruvothu resigns from AMMA :   கேரள நடிகர் சங்கம் (Association of Malayalam Movie Artists (AMMA)), பாவனா வழக்கிற்கு பிறகு இரண்டாக உடைந்தது. பலரும் அந்த அமைப்பில் இருந்து வெளியேறினார்கள். ஆனாலும் நடிகை பார்வதி திருவோட்டு  போன்ற வெகு சிலர் அந்த அமைப்பில் தொடர்ந்து இயங்கி வந்தனர். இந்நிலையில், பாவனா குறித்த சர்ச்சையான வகையில் அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் எடவேலா பாபு கூறிய கருத்தினை தொடர்ந்து நடிகை பார்வதி அந்த அமைப்பில் இருந்து வெளியேறினார்.

2018 ൽ എന്റെ സുഹൃത്തുക്കൾ A.M.M.A-യിൽ നിന്ന് പിരിഞ്ഞു പോയപ്പോൾ ഞാൻ സംഘടനയിൽ തന്നെ തുടർന്നത് തകർന്നുകൊണ്ടിരിക്കുന്ന…

Posted by Parvathy Thiruvothu on Monday, 12 October 2020

ட்வெண்டி20 என்ற திரைப்படத்தை தயாரித்து வழங்கியத் அம்மா. அதன் தொடர்ச்சியாக புதிய படம் தயாராகிக் கொண்டிருக்கின்ற நிலையில், அப்படத்தில் பாவனா நடிப்பாரா என்று தனியார் சேனல் ஒன்றில் பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், ”பாவானா அம்மாவில் தற்போது இல்லை. முதல் பாகத்தில் சிறப்பாக பணியாற்றி இருந்தார். ஆனால் இறந்த ஒன்றை மீண்டும் கொண்டுவருதல் சரியாக இருக்காது” என்று கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து, பார்வதி தன்னுடைய முகநூல் பக்கத்தில், 2018ம் ஆண்டு, என்னுடைய நண்பர்கள் பலர் அம்மாவில் இருந்து வெளியேறினார்கள். ஆனால் ஒரு சிலராவது உடைந்து போன அமைப்பை சீர்படுத்த அங்கே இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். ஆனால் சமீபத்தில் பாபு பேசிய அந்த வார்த்தைகள், என்னுடைய அனைத்து நம்பிக்கையும் இழந்துவிட்டேன். இந்த அமைப்பால் முழுமையாக ஒதுக்கிடப்பட்ட ஒரு பெண்ணை ஒரு இறந்தவருக்கு சமமாக கூறுவது அறுவருக்கதக்கதாக இருக்கிறது. இந்த அமைப்பில் இருந்து விலகுவதாக கூறிய அவர், இது போன்ற மோசமான கருத்துகளை பதிவு செய்த பாபு பதவி விலக வேண்டும் என்றும் வற்புறுத்தியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Parvathy thiruvothu resigns from amma

Next Story
தனது ‘வொர்க் அவுட்’ ரகசியங்கள் பதிவிட்ட நடிகர் விஜய்: வீடியோ வைரல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com