scorecardresearch

சர்வதேச விருதை வென்ற பார்வதியின் படம்!

இயக்குநர் வசந்த் இயக்கியிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

Parvathy thiruvothu Sivaranjaniyum innum sila pengalum
Parvathy

Parvathy: எந்த மாதிரியான கதை அல்லது கதாபாத்திரமாக இருந்தாலும், நடிப்பில் ‘பிரேக்’ விழுந்துவிடக் கூடாது என்பதற்காக ‘ஓகே’ சொல்லும் நடிகைகள் மத்தியில், அழுத்தமான கதாபாத்திரங்களில் நடிப்பவர் நடிகை பார்வதி.

இயக்குநர் சசியின் ’பூ’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி, அதைத் தொடர்ந்து ’மரியான்’ மற்றும் ’சென்னையில் ஓரு நாள்’ போன்ற திரைப்படங்களில் நடித்தார். தற்போது இயக்குநர் வசந்த் இயக்கியிருக்கும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மூன்று பெண்களை மையப்படுத்தியுள்ள இந்தப் படத்தில், பார்வதியுடன் இணைந்து, லட்சுமி பிரியா சந்திரமெளலி மற்றும் களீஸ்வரி ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம்  ஜப்பானில் நடைபெற்ற ஃபுகுவோவா சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது. அதோடு, சிறந்த படத்துக்கான சர்வதேச விருதையும், ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரைப்படம் பெற்றிருக்கிறது. இதற்காக வசந்த் தனது எழுத்தாளர்களான அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Parvathy thiruvothu sivaranjaniyum innum sila pengalum director vasanth

Best of Express