Advertisment

ஹீரோவுக்கு டஃப் கொடுக்கும் வில்லன்: ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா பதான்?

குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான ஷாருக்கானின் "பதான்" படம் எந்தளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துயிருக்கிறது என்பதையும் இப்படத்தின் விமர்சனத்தையும் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
pathaan, pathan, pathaan review, pathan review, pathaan star rating, shah rukh khan, pathaan box office, ஷாருக்கான், பதான், பதான் திரைவிமர்சனம், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம், shah rukh khan movie, deepika padukone, john abraham, pathaan review live updates, pathaan show timings, pathan shows, watch pathan, watch pathaan

நவீன் குமார்

Advertisment

"பாலிவுட் பாட்ஷா" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் "ஷாருக்கான்" கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்னர் "ஜீரோ" என்ற படத்தில் நடித்தார். அந்த படம் படுதோல்வியை சந்திக்கவே இனிமேல் சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கும் வந்திருந்தார். அதன் பிறகு ரசிகர்களுக்காக தன் முடிவை மாற்றி நல்ல படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிப்பது என்ற முடிவில் இருந்தார். அப்போது சித்தார்த் ஆனந்த் சொன்ன கதை அவருக்கு பிடித்து விடவே அந்தப் படம் தான் "பதானாக" தயாராகி இன்று உலகம் முழுவதும் சுமார் 7,500 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகியிருக்கிறது. "ஷாருக்கானை" மீண்டும் ஹீரோவாக பார்க்க ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த நிலையில், இப்படத்தின் முன்பதிவு பிரம்மாண்டமான அளவில் இருந்தது. மேலும், இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல சர்ச்சைகளில் சிக்கியது. அதனால், இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்திருந்தது.

Republic Day Special Price | This limited offer gives you an annual subscription at Rs 999 along with added benefits. Click to see offer

இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று வெளியான "பதான்"படம் எந்தளவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துயிருக்கிறது என்பதையும் இப்படத்தின் விமர்சனத்தையும் கீழே காணலாம்.

படத்தின் கதை:

இந்தியாவில் முன்னாள் ஸ்பை ஏஜென்ட் ஆன ஜான் ஆபிரகாம் (வில்லன் டைகர் ஷெராஃப்) இந்தியாவுக்கு எதிராக சதிசெய்ய திரும்ப, அவனது மிஷனை தடுத்து நிறுத்த வரும் மற்றொரு அராஜகமான ஏஜென்ட் தான் பதான் (ஷாருக்கான்). ஆனால், அந்த ஏஜென்ட்டை திசை திருப்ப நாயகி தீபிகா படுகோன் கவர்ச்சியாக வருகிறார், அவரது அழகில் மயங்கி அவள் பின்னால் சுற்றுகிறார் ஷாருக், அதன் பிறகு சுதாரித்துக் கொண்டு இடைவேளை ட்விஸ்ட்டுக்கு பிறகு வில்லனை எப்படி வீழ்த்தினார்? என்பது தான் பதானின் கதை.

ஷாருக்கான்:

*நான்கு ஆண்டுகளாக படம் நடிப்பதில்லை என்றாலும் "பிரம்மாஸ்திரம்" போன்ற சில படங்களில் கேமியோ ரோலில் நடித்துக் கொண்டு தனது இருப்பை காட்டிக் கொண்டிருந்த ஷாருக்கானுக்கு இப்படம் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அவர் செய்த முயற்சிகளை அவரின் நடிப்பில் இப்படத்தில் நம்மால் காண முடிகிறது. 8 பேக்ஸ்சுடன் வரும் ஷாருக்கானை பார்க்கும்போது திரையரங்கம் ஆரவாரத்தில் அதிர்கிறது. நிறைய சண்டை காட்சிகளை அசால்ட்டாக செய்து அசத்தியிருக்கிறார். நாட்டிற்காக என்ன தியாகமும் செய்யலாம் என்று அவர் பேசும் வசனங்களில் கண்கலங்க வைக்கிறது அவரது நடிப்பு. வழக்கம்போல, காமெடி ஆக்சன்,சென்டிமென்ட் என எல்லா இடங்களிலும் மிரட்டி அவரது ரசிகர்களுக்கு முழு விருந்து வைத்துள்ளார் ஷாருக்கான். கடந்த சில ஆண்டுகளில் அவர் நடித்த சிறந்த படமாக இது இருக்கும்.

ஜான் ஆபிரகாம்:

வார் படத்தின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியிருந்த அவருக்கு இப்படம், வில்லத்தனத்தில் அடுத்த பரிமாணத்தை கொடுத்திருக்கிறது. இவரும் ஷாருக்கானும் மோதும் காட்சிகளில் ஷாருக்கானயே மிஞ்சும் அளவிற்கு இவருடைய நடிப்பு அமைந்திருக்கிறது. இவருடைய நடிப்பு பல இடங்களில் திரைக்கதையில் விறுவிறுப்பையும், ஆர்வத்தையும் கூட்டுகிறது.

தீபிகா படுகோனே:

நடிப்பை தாராளமாக வழங்கி இருக்கிறாரோ இல்லையோ, கவர்ச்சியை தாராளமாக வழங்கி ரசிகர்களை கிரங்கடித்திருக்கிறார். மேலும், ஆக்சன் காட்சிகளில் இவருடைய நடிப்பு அருமை.

இயக்குனர் சித்தார்த் ஆனந்த்:

படத்தின் கதையாகவே தேசப்பற்றை ஊக்குவிப்பதாக அமைந்திருப்பதால் ரசிகர்கள் கதையுடன் எளிதாக கனெக்ட் ஆக முடிகிறது . திரைக்கதையும் தொய்வில்லாமல் சற்று விறுவிறுப்பாக செல்கிறது. காட்சிகளாக பிரம்மாண்டத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார் இயக்குனர்.

படத்தின் பாசிட்டிவ்ஸ்:

ஷாருக்கானின் நடிப்பு பிரமாதமாக அமைந்திருக்கிறது. மேலும், அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் வில்லத்தனமும் இருப்பதால் ஹீரோ-வில்லன் மோதல் ரசிகர்களை அதிர வைக்கிறது. "தேசப்பற்று" என்னும் கருத்தை திகட்டும் அளவில் கொடுக்காமல் தேவையான அளவில் கொடுத்திருப்பது சிறப்பு. படத்தின் பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலத்தையும் ஈர்ப்பையும் கொடுத்துள்ளது. "சல்மான்" கானின் கேமியோ பெரிய அளவில் படத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது,. "சல்மான்-ஷாருக்" ஒன்றாக தோன்றும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் சத்தம் பறக்கிறது.

படத்தின் நெகடிவ்ஸ்:

தீபிகா படுகோனின் கவர்ச்சி ஒரு சில இடங்களில் முகம் சுழிக்க வைக்கிறது. சண்டை காட்சிகள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருந்தாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அந்த பிரம்மாண்டமே ரசிகர்களுக்கு சலிப்பு தட்டுகிறது. படத்தின் சண்டைக் காட்சிகளில் அதிக அளவு லாஜிக் மீறல்கள் இருப்பது சற்று பின்னடைவு.

மொத்தத்தில் ஹாலிவுட் சண்டை படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு ஹாலிவுட் ஸ்டைலில் இருக்கும் இப்படமும் நிச்சயமாக பிடிக்கும். ஆனால், ஜென்ரல் ஆடியன்ஸிற்கு இப்படத்தின் சண்டைக் காட்சிகள் சற்று ஓவராக இருந்தாலும் பலமான திரைக்கதை அந்த சிறு பின்னடைவுகளை எல்லாம் தகர்த்தெறிந்து ஒரு நல்ல மாஸ் கமர்சியல் படம் பார்த்த திருப்தியை கொடுத்திருக்கிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bollywood Shah Rukh Khan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment