/tamil-ie/media/media_files/uploads/2019/09/Karthik-Aaryan-Ananya-Pandey.jpg)
Karthik Aaryan - Ananya Pandey
Pati Patni Aur Woh: இந்தி சினிமாவின் வலுவான நடிகர்களான கார்த்திக் ஆர்யன், அனன்யா பாண்டே மற்றும் பூமி பெட்னேகர் ஆகியோர் நடிக்கும் 'பாடி பட்னி அவுர் வோ' படப்பிடிப்பு லக்னோவில் நடந்து முடிந்துள்ளது. அப்போது படபிடிப்பின் இறுதி நாளில், படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
அப்போது உற்சாகமான இருந்த நடிகர், கார்த்திக் ஆர்யன் அங்கிருந்த தனது குழுவினர் அனைவரது முகத்திலும் கேக்கை பூசினார். அப்படியே படத்தின் ஹீரோயின் அனன்யா பாண்டேவின் முகத்திலும் கேக்கை தடவினார். அந்த வீடியோவை கார்த்திக்கும், அனன்யாவும் தத்தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர்.
'பாடி பட்னி அவுர் வோ' படம் இந்தாண்டு டிசம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. முடாசர் அஸீஸ் இயக்கியுள்ள இந்தப் படத்தை, பூஷன் குமார், கிருஷ்ணா குமார், ரேணு சோப்ரா மற்றும் ஜூனோ சோப்ரா ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
1978 ஆம் ஆண்டு, பி.ஆர்.சோப்ராவின் 'பதி பட்னி அவுர் வோ' திரைப்படம் வெளியாகியிருந்தது. எக்ஸ்ட்ரா மேரிடல் அஃபைரை மையமாக வைத்து காமெடி களத்தில் உருவாகியிருந்த இப்படம், மாபெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் மீண்டும் 'பாடி பட்னி அவுர் வோ' டைட்டிலில் மற்றுமொரு படம் உருவாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.