ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்

Dhanush Starrer Pattas Movie Release Latest Updates : தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் குறித்த விமர்சனம், ரசிகர்கள், திரைப்பிரபலங்களின் கருத்துகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

By: Jan 16, 2020, 12:11:59 PM

Pattas Latest Audience Reviews, Ratings: தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் குறித்த விமர்சனம், ரசிகர்கள், திரைப்பிரபலங்களின் கருத்துகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்…

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். படம் குறித்து இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியதாவது, சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் ஆட்சிக்காலத்தில், பழங்கால தற்காப்புகலையான களரிக்கு முந்தைய அடிமுறை எனப்படும் தற்காப்புக்கலையை மையமாகக்கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷை எனக்கு நீண்டநாட்களாக தெரியும். ஒரு விஷயத்தில் அவர் கமிட் ஆகிவிட்டால், அதில் தனது முழு அர்ப்பணிப்பையும் செலுத்துனார். கொடி படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் உடன் இணைந்துள்ளேன். கொடி படம் கமர்சியலாக வெற்றியடைந்த நிலையில், இந்த பட்டாஸ் படம் வெற்றி பெறும் என்று நம்புவதாக அவர் மேலும் கூறினார்.

Live Blog
Dhanush Starrer Pattas Movie Release Latest Updates : தனுஷ், சினேகா, மெஹ்ரீன் பிர்ஜாடா, நாசர், நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படம் குறித்த விமர்சனம், ரசிகர்கள், திரைப்பிரபலங்களின் கருத்துகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
16:15 (IST)15 Jan 2020
ரஜினி - கமலின் கலவையே தனுஷ்

பட்டாஸ் படம் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. ரஜினி மற்றும் கமலின் கலவையில் எம்ஜிஆர் ஆக தனுஷ் ஜொலித்துள்ளார். இந்திய சினிமாவின் முத்து ஆபரணமாக தனுஷ் ஜொலிக்கிறார்.  - @Justano84979866

இந்த படத்தில் நடித்த தனுஷ், இயக்குனர் துரை செந்தில்குமார், தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் உள்ளிட்ட அனைவரும் இந்த இனிய பொழுதுபோக்கு படத்தை தந்ததற்கு நன்றி- @harshahere

14:47 (IST)15 Jan 2020
பட்டாஸ் பிளாக்பஸ்டர் ஹிட்

பட்டாஸ் பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னர் மட்டுமல்லாது பிளாக்பஸ்டர் ஹிட் படம் என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.  இன்று ரசிகர்கள் பார்த்துள்ள நிலையில், நாளைமுதல் குடும்பம் குடும்பமாக தியேட்டருக்கு படையெடுக்க துவங்கிவிடுவர். இதில் எவ்வித சந்தேகமுமில்லை. தனுஷின் திரையுலக பயணத்தில் அதிக வசூல் பெறும் படமாக இது அமையும் என்று @dhanasekar_raja குறிப்பிட்டுள்ளார்.

13:53 (IST)15 Jan 2020
தனுஷ் நடிப்பு செம...

தனுஷ் தான் தன் நடிப்பினால், படத்தை உயர்த்திப்பிடிக்கிறார். தந்தை கேரக்டர் ஆனாலும், சரி, இளமை ததும்பும் மகன் கேரக்டர் என இரண்டு கேரக்டர்களிலும் பின்னி பெடலெடுக்கிறார் தனுஷ் என்று @deepak_Afc  குறிப்பிட்டுள்ளார்.

13:31 (IST)15 Jan 2020
தனுஷ் - சினேகா செம ஜோடி

தற்காப்பபுக்கலையை, தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு யாரும் காட்டியதில்லை என்று சொல்லலாம். தனுஷ் தன் கதாபாத்திரத்திற்கு தேவையான அளவுக்கு நடிப்பை வழங்கியுள்ளார். நடிகை சினேகாவின் அனுபவ நடிப்பு பல இடங்களில் கைகொடுக்கிறது. தனுஷ் - சினேகா செம ஜோடியாக படத்தில் உள்ளனர் என்று @cinemapayyan தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

12:53 (IST)15 Jan 2020
‘பட்டாஸ்’ பக்கா கமர்ஷியல் எண்டர்டெயினர்…

வேலையில்லா பட்டதாரி, கில்லி வரிசையில் பக்கா கமர்ஷியல் எண்டர்டெயினர் படமாக வெளியாகியுள்ளது பட்டாஸ். படம் பார்த்த அனைவருக்கும் நல்ல படம் பார்த்த திருப்தி நிச்சயம் ஏற்படும். படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று @Trollvipoffl குறிப்பிட்டுள்ளார்.

12:24 (IST)15 Jan 2020
தனுஷூக்காகவே பார்க்கலாம்

தனுஷ் இரட்டை வேடங்களில் நடிப்பில் அசத்தியுள்ளார். தந்தை கேரக்டரில் வரும் தனுஷ், பக்குவப்பட்ட நடிப்பிலும், மகனாக வரும் தனுஷ், இளமை துள்ளலுடனும் படத்தை ரசிகர்கள் கொண்டாட வைக்க உதவியிருக்கின்றனர். சினேகாவின் நடிப்பு குறிப்பிடத்தக்க வகையில் உள்ளதாக  டுவிட்டர் பதிவர் Sreedhar Pillai தெரிவித்துள்ளார்.

12:00 (IST)15 Jan 2020
எளிதில் கணிக்கத்தக்க திரைக்கதை

அசுரன் படம் போன்று பட்டாஸ் படத்தில் வலுவான திரைக்கதை இல்லை. திரைக்கதையும் எளிதில் கணிக்கத்தக்க வகையிலேயே இருப்பதாக @SriniMaamaa16 என்ற டுவிட்டர் பதிவர் குறிப்பிட்டுள்ளார்.

11:36 (IST)15 Jan 2020
குடும்பத்தோட பாக்கலாம்

பட்டாஸ் படத்தை  குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம். பாடல்கள் சிறப்பாக உள்ளன. தனுஷ், சினேகா உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக உள்ளதாக டுவிட்டர் பதிவர் தெரிவித்துள்ளார்.

11:10 (IST)15 Jan 2020
சினேகாவின் நடிப்பு அபாரம்

தற்காப்பு கலை தொடர்பான காட்சிகளில் நடிகை சினேகா, பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரது நடிப்பு, இந்த படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்துள்ளதாக சினிமா விமர்சகர் சுபகீர்த்தனா தெரிவித்துள்ளார்.

10:52 (IST)15 Jan 2020
தனுஷ் - நம்ம ஊரு புரூஸ் லீப்பா

பட்டாஸ் படத்தில் தற்காப்புக்கலை காட்சிகளில் தனுஷ், நம்ம ஊரு புரூஸ் லீ போன்று காட்சியளிப்பதாக கவுசிக் எல் எம் என்ற டுவிட்டர் பதிவர் தெரிவித்துள்ளார்

10:22 (IST)15 Jan 2020
பட்டாஸ், கொடி வேற வேற படம்

பட்டாஸ், கொடி நிச்சயமாக வேற வேற படம் தான். தனுஷ் என்கிற நடிப்பு சுரங்கத்தில் இருந்து நாம் எப்போதும் வித்தியாசமான நடிப்பு என்ற வைரத்தை தொடர்ந்து எடுத்துக்கொண்டு இருக்கலாம். அந்தளவுக்கு திறமையான நடிகர் தனுஷ். அவரிடம் இல்லாத நடிப்பு இந்த உலகத்திலேயே இல்லை எனலாம். எந்தவொரு கேரக்டரையும் அசால்டாக செய்துமுடிக்கும் திறமை அவரிடம் உண்டு.  இந்த படத்தில் அவரை வித்தியாசமாக பார்ப்பீர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் துரை செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

10:07 (IST)15 Jan 2020
பொங்கல் பண்டிகைக்கான சிறந்த படம் - பட்டாஸ்

பொங்கல் பண்டிகையைெயாட்டி, குடும்பத்துடன் காண சிறந்த படமாக பட்டாஸ் படம் உள்ளதாக பத்திரிகையாளர் ஸ்ரீதேவி ஸ்ரீதர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

Dhanush Starrer Pattas Movie Release Latest Updates : பட்டாஸ் படத்தில் தனது கேரக்டர் குறித்து மெஹ்ரீன் பிர்ஜாடா கூறியதாவது, இந்த படத்தில் எனது கேரக்டரின் பெயர் சாத்னா. நான் தனுஷ் உடன் இணைந்து நடித்துள்ள காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. படம் பார்க்கும் அனைவரையும் மகிழ்விக்கும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

தனுஷ்,, எந்தமாதிரியான சீனையும் ஒரு டேக்கில் முடித்துவிடுவார். அந்தளவுக்கு திறமையான நடிகர். ஆக்ஷன், கட் என்று சொல்லுவதற்குள் அவர் மேஜிக்கையே நிகழ்த்தி விடுவார். அவர் என்னைப்போன்ற பல இளம் நடிகைகளுக்கு ரோல்மாடலாக விளங்கி வருகிறார். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய நல்ல விஷயங்கள் இருப்பதாக பிர்ஜாடா மேலும் கூறினார்.

Web Title:Pattas dhanush pattas pattas movie release live updates review and fans critics

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
இதைப் பாருங்க!
X