அசுரன் படத்தில் சிவசாமியாக கலக்கிய தனுஷ், திரவியப்பெருமான் மற்றும் சக்தி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள பட்டாஸ் படம் எப்படியிருக்கு என்று இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.
தனுஷ் கடைசியாக அசுரன் படத்தில் நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி முக்கியமானவராகிவிட்டார். பலரின் கண்களுக்கும் இன்னும் அவர் சிவசாமி தான். அதிலிருந்து மாறி தற்போது பட்டாஸாக பொங்கலுக்கு வந்திருக்கிறார்.
தனுஷ், பட்டாஸாக ஒரு திருடனாக ஊரில் ஜாலியாக தன் நண்பர் கலக்கப்போவது யாரு சதீஷுடன் சுற்றி வருகிறார். அவ்வப்போது சின்னச்சின்ன திருட்டு வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். அவரை எதிர்வீட்டு பெண்ணாக கண்களை ஈர்க்கிறார் ஹீரோயின் மெஹ்ரீன்.
மறுபக்கம் சினேகா அடிமுறை என்னும் தற்காப்பு கலை பயின்று தன் ஆசானையே கணவனாக பெற்றவர். அவருக்கு வில்லன் நவீன் சந்திராவால் பெரும் அழிவு. தன் மகனை தொலைத்த ஏக்கத்திலும் தன்னை விட்டு பிரிந்த கணவரின் சோகத்தில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்.
இதற்கிடையில் சினேகாவுக்கு ஒரு பெரும் ஆபத்து. அவரை காப்பாற்ற போய் பல உண்மைகள் தனுஷுக்கு தெரியவருகிறது. சினேகாவுக்கு நேர்ந்தது என்ன? அவரின் மகன் கிடைத்தாரா? அழிக்கப்பட்ட தற்காப்பு கலை மீண்டும் உயிர் பெற்றதா என்பதே பட்டாஸ் படத்தின் கதைச்சுருக்கம்.
கதை ரொம்ப பழசு. நடப்பதை எளிதில் யூகிக்க முடிகிறது. இது தான் கதையின் மைனஸ். அடிமுறைக் கலையை அப்படியே காட்டாமல் மாஸாக காட்ட நினைத்து சொதப்பியுள்ளார் துரை செந்தில் குமார். பட்டாஸ்-சாதனா காட்சிகளை காமெடியாக காட்ட முயன்று தோற்றுள்ளார் இயக்குநர்.
தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கியிருந்த துரை செந்தில் குமார் தற்போது பட்டாஸ் படத்தில் மீண்டும் கூடியுள்ளார். கொடி படமே ஓகே. இந்த படம் கொஞ்சம் ஸ்லோ என சொல்லும் படி வைத்துள்ளார். 7 ம் அறிவு போன்ற படங்களை பார்த்து வந்தவர்களுக்கு இந்த படம் ஓகே லெவல் தான்.