பட்டுக்கோட்டை- கண்ணதாசன்- சிவாஜி: தீராப் பகையை தீர்த்து வைத்த சூப்பர் ஹிட் பாடல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையேயான தீராப் பகையை ஒரு சூப்பர் ஹிட் பாடல் தீர்த்து வைத்த சுவாரசியமான தகவல் வியக்க வைக்கிறது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையேயான தீராப் பகையை ஒரு சூப்பர் ஹிட் பாடல் தீர்த்து வைத்த சுவாரசியமான தகவல் வியக்க வைக்கிறது.
பட்டுக்கோட்டை- கண்ணதாசன்- சிவாஜி: தீராப் பகையை தீர்த்து வைத்த சூப்பர் ஹிட் பாடல்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் இடையே மூண்ட சண்டையால், இனிமேல் தனது படங்களுக்கு இனிமேல் கண்ணதாசன் பாட்டெழுதக் கூடாது என்று சிவாஜி உத்தரவிட்டிருந்த நிலையில், இருவருக்குமான தீராப் பகையை ஒரு சூப்பர் ஹிட் பாடல் தீர்த்து வைத்த சுவாரசியமான தகவல் வியக்க வைக்கிறது.
Advertisment
தமிழ் சினிமாவில் இன்றைக்கும் நடிப்புக்கு இலக்கணம், அகராதி என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி கணேசன்தான் என்று கூறுவார்கள். அதே போல, சினிமா பாடல் வரிகளுக்கு கவியரசு கண்ணதாசன் தான் என்று இன்றைக்கு புகழ்மாலை சூட்டுபவர்கள் உண்டு. ஆனால், நடிகர் சிவாஜி கணேசனுக்கும் கவியரசு கண்ணதாசனுக்கும் சண்டை ஏற்பட்டதைத் தொடர்ந்து, இனிமேல் தனது படங்களுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். இதனால், இருவருக்கும் சண்டை நிலவிய காலத்தில் வெளியான சிவாஜி கணேசனின் சில படங்களில் கண்ணதாசனின் பாடல்கள் இடம் பெறவில்லை.
இந்த சூழ்நிலையில்தான், சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்த பாகப் பிரிவினை படம் தயாராகியது. விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்த இந்த படத்தில், சிவாஜி கணேசன் ஒரு மாற்றுத் திறனாளியாக நடித்திருப்பார். இந்த படத்தில் சிவாஜி கணேசன், தனது குழந்தைக்கு தாலாட்டு பாடுவதாக ஒரு பாடல் காட்சி, பாடல் எழுதுவதற்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தை அழைத்துள்ளனர். பாட்டு எழுத வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வேறு எந்த சூழல் என்றாலும் அதற்கு பாட்டு எழுதிவிடுவேன். தாலாட்டு காட்சிக்கு வரவில்லை என்று கூறியிருக்கிறார். மேலும், தாலாட்டு பாடல்கள் எழுதுவதில் கவிஞர் கண்ணதாசன் சிறப்பாக எழுதுவார் அவரை எழுத வைக்கலாம் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து, பாகப்பிரிவினை படத்தின் இயக்குனர் பீம்சிங், தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி இருவரும் சென்று கவியரசு கண்ணதாசனைச் சந்தித்து, சிவாஜியின் படத்திற்கு ஒரு தாலாட்டு பாடல் மட்டும் எழுத வேண்டும் என்று கூறியுள்ளனர். கண்ணதாசனும் சிவாஜி கணேசனுடனான் பகையை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு அந்த தாலாட்டு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார். பாடல் பதிவு முடிந்து இயக்குனர் பீம் சிங், தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி இருவரும் அந்த பாடலை சிவாஜி கணேசனுக்கு போட்டுக் காட்டியுள்ளனர். பாடலைக் கேட்ட சிவாஜி கணேசன் மிகவும் பிடித்துப் போய், “என்ன இருந்தாலும் பட்டுக்கோட்டை... பட்டுக்கோட்டைதான்யா” என்று பாராட்டியுள்ளார். இதற்கு இயக்குனர் பீம்சிங் மற்றும் தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி, இந்த பாட்டை எழுதியது பட்டுக்கோட்டை இல்லை, கவிஞர் கண்ணதாசன் என்று கூறியுள்ளனர்.
Advertisment
Advertisements
இதைக் கேட்டு நடிகர் சிவாஜி கணேசன், இந்த பாட்டை கண்ணதாசன் தவிர வேறு யாரும் எழுத முடியாது, அவன் ஒருவன்தான் இந்த மாதிரி பாடலை எழுத முடியும் என்று கூறியுள்ளார். இந்த பாடலுக்கு பிறகு, சிவாஜி கணேசன் - கண்ணதாசன் இடையே நிலவிய தீராத பகை முடிவுக்கு வந்தது.
சிவாஜி கணேசன் - கண்ணதாசன் தீராப் பகையைத் தீர்த்து வைத்த அந்த சூப்பர் ஹிட் பாடல், “ஏன் பிறந்தாய் மகனே, ஏன் பிறந்தாயோ’ என்ற பாடல்தான் அது. இப்படி தமிழ் சினிமா மாபெரும் இரண்டு ஆளுமைகளான சிவாஜி கணேசன் - கண்ணதாசன் இடையே நிலவிய தீராப் பகையை முடிவுக்கு கொண்டு வந்த அந்த சூப்பர் ஹிட் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“