/tamil-ie/media/media_files/uploads/2021/02/2-Copy-2-46.jpg)
pavam ganesan serial vijay tv pavam ganesan
pavam ganesan serial vijay tv pavam ganesan : கணேசனின் அக்கா கணவர் வீட்டில் கஞ்சத்தனமாக இருப்பவர். அவர் கிச்சனில் இருக்கும் பொருட்களை கூட அளந்து அளந்து தான் கொடுப்பவர்
அவர் கணேசன் குடும்பத்தை பற்றி மிகவும் மோசமாக பேசுகிறார். அதனால் கணேசனின் அக்கா கடும் கோபம் அடைகிறார்.மறுபுறம் கணேசன் தனது தங்கைகளின் படிப்பு செலவு மற்றும் வாடகை கொடுப்பதற்காக பணம் எப்படி ரெடி செய்வது என தெரியாமல் கணேசன் விழித்து கொண்டிருக்கிறார்.
இப்படி பல பிரச்சனைகள் இருக்க, கணேசனின் அக்கா மகள் வயதுக்கு வருகிறாள். அவளுக்கு தாய்மாமன் முறை செய்யும் இடத்தில் இருப்பது கணேசன் தான். ஏற்கான்வே, குடும்பத்தை கேவலமாக பேசும் மாமா, தாய்மாமன் சீர் குறித்து இன்னும் கணேசனை மட்டப்படுத்துகிறான்.
இந்த நேரத்தில் தான் வேலை செய்யும் இடத்தில் 3லட்சம் கடனாக பெறுகிறான் கணேசன்.
ரொம்ப பெரிய அதிகாரி போல.. நம்ம எல்லா சீரியல்லையும் இருக்காரு ????????
பாவம் கணேசன் - இன்று மாலை 6:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #PaavamGanesan#VijayTelevisionpic.twitter.com/6EaIEWHsgD— Vijay Television (@vijaytelevision) February 8, 2021
ஆனால் அந்த பணமும் தம்பியின் மருத்துவ செலவு, எதிர்பாராத செலவுக்குபோய்விடுகிறது. தாய்மாமன் இடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய இடத்தில் கணேசன் இருக்கிறான். அதுமட்டுமில்லை, 3 லட்சம் பணத்திற்கு உடனே எங்கே போவான் கணேசன் பாவம்ல்லா. இதற்கிடையில், போலீஸ் பிரச்சனை வேற.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.