அபினய் காட்டிய ஓவர் அக்கறை எதற்காக? நேரடியாக கேட்டு தெளிவுபடுத்திய பாவனி

Pavani Reddy clarifies to abhinay you are my brother: உங்களை ப்ரோ என்றுதான் கூப்பிடுகிறேன்; ஓவர் அக்கறை காட்டும் அபிநய்-யிடம் தெளிவுப்படுத்தும் பாவனி ரெட்டி

பிக் பாஸ் வீட்டில் அபிநய் என்னிடம் பழகும் விதம், மனதை தொந்தரவு செய்கிறது என கூறியிருக்கிறார் பாவனி ரெட்டி.

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி 2 வாரங்களைக் கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இதில் முதல் வாரத்திலேயே நிகழ்ச்சியிலிருந்து நமீதா மாரிமுத்து தனிப்பட்ட காரணங்களுக்காக விலகினார். பின்னர் இந்த வாரத்திற்கான எலிமினேஷன் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில், நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக நாடியா சங் வெளியேற்றப்பட்டுள்ளார்.

முன்னதாக, முதல் வாரத்தில் பாவனி ரெட்டி தனது கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிகவும் எமோஷ்னலாக பேசி இருந்தார். இதனால் இந்த வார எலிமினேஷனுக்கு, அவரை மற்ற போட்டியாளர்கள் யாரும் நாமினேட் செய்யவில்லை.

மேலும், அவ்வப்போது தான் வாழ்க்கையை இழந்தது பற்றி பாவனி ரெட்டி வருத்தத்துடன் பேசி வருகிறார் அவர். அதனால் அவர் மீது பிக் பாஸ் ரசிகர்களுக்கு அனுதாபம் வந்திருக்கிறது.

இந்த நிலையில், சகபோட்டியாளரான அபிநய் தன்னிடம் பழகும் நோக்கம் டிஸ்டர்ப் ஆக உள்ளதாக அபிஷேக்கிடம் சொல்கிறார் பாவனி. பாவனி ரகசியமாக சொன்ன விஷயத்தை பிரியங்கா உடன் பகிர்ந்துகொள்கிறார் அபிஷேக். “அபிநய் தன்னை கட்டாயப்படுத்துவது போல அவள் உணர்கிறாள். ஏன்னா நம்ம அவனை செஞ்சிடக்கூடாதுனு அவன் அப்படி காட்டிக்கிறானா என தெரியல. அதனால் என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு என்னிடம் மட்டும் தான் பேசினாள், அதுவும் அவளாகத்தான் பேசினாள்” என அபிஷேக் சொல்கிறார். இது நமக்கு தேவை இல்லாத விஷயம், நாம் இதில் தலையிட வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார்.

பின்னர், அது ஒரு அக்கறைலதான் சொல்றாங்க, ஆனா எனக்கு என்ன ஆகுது தெரியுமா, மனதை தொந்தரவு செய்கிறது, என அபிநய் காட்டும் ஓவர் அக்கறைப் பற்றி பாவனி மதுமிதாவிடம் கூறுகிறார்.

அதன் பின் அபிநய்-ஐ நேராக அழைத்து பேசுகிறார் பாவனி. “நீங்கள் செய்வது எனக்கு வேறு மாதிரி தோன்றுகிறது. உங்களை நான் ப்ரோ என்று தான் ஆரம்பத்தில் இருந்து கூப்பிடுகிறேன். நான் அப்படி கூப்பிடுவது உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை தானே?” என கேட்கிறார்.

அதற்கு, நான் என் பெயர் அபினவ் இல்லை அபிநய் என கூப்பிடு என்று தான் சொன்னேன் வேறு எதுவும் இல்லை என அவர் விளக்கம் கொடுக்கிறார். அப்படி என்றால் நான் தான் உங்களை பற்றி தவறாக நினைத்து கொண்டிருக்கிறேன், மன்னித்துவிடுங்க என சொல்லி மன்னிப்பு கேட்கிறார் பாவனி.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pavani reddy clarifies to abhinay you are my brother

Next Story
Bigg Boss 5 : என்ன அபிஷேக் இப்படி மாட்டிகிட்டே இருக்கியேப்பா… பாவம்யா நீ!Bigg Boss Tamil 5 Review Day 15 Kamal Hassan Nadiya Eviction
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com