சினிமாக்காரர்களே உஷார்… விஜய் டி.வி-யின் 'அழகிய தென்றல்' உங்களை தாக்க வருகிறது!
‘Thendral Vanthu Ennai Thodum’ serial Actress Pavithra Janani heading into Big screen Tamil News: சீரியல் நடிகை பவித்ரா ஜனனி விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
‘Thendral Vanthu Ennai Thodum’ serial Actress Pavithra Janani heading into Big screen Tamil News: சீரியல் நடிகை பவித்ரா ஜனனி விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள்.
Pavithra Janani Tamil News: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் 'தென்றல் வந்து என்னைத் தொடும்' சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் வெற்றியாக வினோத் பாபு, அபிநயாவாக பவித்ரா ஜனனி, ராதாவாக தர்ஷிகா, கமலாவாக பிரியா, ரங்கசாமியாக எல்.ராஜா மற்றும் இன்னும் பலர் நடித்து வருகின்றனர்.
Advertisment
இதில் அபிநயா (பவித்ரா) மற்றும் வெற்றி (வினோத்) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றியே கதை நகர்கிறது. ஒருநாள் எதிர்பாராத சூழ்நிலையில், கோவிலில் வைத்து அபிநயாவுக்கு தாலி கட்டி விடுகிறார் வெற்றி. இந்த நிகழ்வுக்குப்பின் அவர்களது வாழ்க்கையில் நடக்க இருப்பவை தான் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.
Advertisment
Advertisements
இந்நிலையில், இந்த சீரியலில் அபிநயாவாக நடித்துவரும் பவித்ரா ஜனனி விரைவில் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை பவித்ரா ஜனனி சின்னத்திரையில் கலக்கி வரும் முக்கிய நடிகைகளுள் ஒருவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு, ஆபீஸ், மெல்ல திறந்த கதவு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, லட்சுமி வந்தாச்சு, ராஜா ராணி போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமடைந்தார்.
மேலும், ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்த சீரியல் 800 எபிசோடுகளை கடந்து ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக ஒளிபரப்பாகி முடிந்தது. பவித்ரா ஜனனி தற்போது 'தென்றல் வந்து என்னை தொடும் என்ற சீரியலில்' நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் அவர் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என பிரபல பிஆர்ஓ நிகில் முருகன் அவரது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.