Payal Rajput: கே.எஸ் அதியமான இயக்கும் 'ஏஞ்சல்' படத்தின் மூலம் நடிகை பயல் ராஜ்புட் தமிழில் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில், உதயநிதி ஸ்டாலின் மற்றும் கயல் ஆனந்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்தி சீரியல்களில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பயல், பின்னர் கார்த்திகேயா நடித்த, தெலுங்கு திரைப்படமான 'ஆர்.டி.எக்ஸ் 100' படத்தில் ஹீரோயினாக தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார்.
பயல் ராஜ்புட் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பவர். ரசிகர்கள் மற்றும் தன்னை பின்தொடர்பவர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் சூடான படங்கள் மற்றும் வீடியோக்களை தவறாமல் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார். கோடைகால வெப்பம் ஏற்கனவே திணறடிக்கிறது. போதாக்குறைக்கு கொரோனா லாக்டவுன் வேறு. இந்நிலையில் இந்த இளம் நடிகை ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆடையை துணிச்சலாக அணிந்திருக்கிறார் பயல்.
"எனது ஆடை எப்படி இருக்கிறது?” என்ற கேப்ஷனில் அந்த படத்தை பதிவிட்டிருக்கிறார் பயல். இளம் நடிகையின் இந்த புதுமையான ஆடை உணர்வுக்கு ஒரு புறம் பாராட்டும் மறுபுறம் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”