தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம்.
இவர் திருப்பதியில் நடந்த ’கலாட்சேப’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
தெலுங்கு கலாச்சாரத்தைப் பற்றி பேசுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய அவர், “படம் சம்பந்தப்பட்ட பொது விழாக்களுக்கு, எப்படி உடை உடுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கூட நடிகைகளுக்கு தெரியவில்லை. அப்படி உடுத்தினால் மட்டும் தான் நடிகர்களும் இயக்குநர்களும் சான்ஸ் தருவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. என்னுடைய கருத்து அவர்களை கோபமடையச் செய்தாலும், அதைப்பற்றி நான் கவலைப் பட மாட்டேன். தவிர இன்றைக்கு இருக்கும் பல நடிகைகளுக்கு தெலுங்கு தெரியாது. அதனால் என்னுடைய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை” என்றார்.
தற்போது இதுகுறித்து பேசியிருக்கும் தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகபாபு, “நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இங்கு யார் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது என்பதை இன்னொருவருக்கு சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை. மிகப் பிரபலமாக இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு சர்ச்சைக்கு உட்படுவது இது முதல் முறையல்ல” என்றிருக்கிறார்.
அதோடு ’ஆர்தடக்ஸ் ஃபூல்ஸ்’ என்ற டைட்டிலில் அவரது யூ-ட்யூப் சேனலில் 4 நிமிட வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
நடிகைகளின் ஆடை குறித்து விமர்சனமா? - இது என்ன எஸ்.பி.பி-யின் புதிய சர்ச்சை
அப்படி உடுத்தினால் மட்டும் தான் நடிகர்களும் இயக்குநர்களும் சான்ஸ் தருவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை.
Follow Us
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 40,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடியிருப்பவர் பாடகர் எஸ்.பி.பால சுப்பிரமணியம்.
இவர் திருப்பதியில் நடந்த ’கலாட்சேப’ நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.
தெலுங்கு கலாச்சாரத்தைப் பற்றி பேசுமாறு அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது பேசிய அவர், “படம் சம்பந்தப்பட்ட பொது விழாக்களுக்கு, எப்படி உடை உடுத்திக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிக் கூட நடிகைகளுக்கு தெரியவில்லை. அப்படி உடுத்தினால் மட்டும் தான் நடிகர்களும் இயக்குநர்களும் சான்ஸ் தருவார்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா எனத் தெரியவில்லை. என்னுடைய கருத்து அவர்களை கோபமடையச் செய்தாலும், அதைப்பற்றி நான் கவலைப் பட மாட்டேன். தவிர இன்றைக்கு இருக்கும் பல நடிகைகளுக்கு தெலுங்கு தெரியாது. அதனால் என்னுடைய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும் பரவாயில்லை” என்றார்.
தற்போது இதுகுறித்து பேசியிருக்கும் தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகபாபு, “நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கிறோம். இங்கு யார் என்ன உடை உடுத்த வேண்டும், என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாது என்பதை இன்னொருவருக்கு சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை. மிகப் பிரபலமாக இருப்பவர்கள் தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு சர்ச்சைக்கு உட்படுவது இது முதல் முறையல்ல” என்றிருக்கிறார்.
அதோடு ’ஆர்தடக்ஸ் ஃபூல்ஸ்’ என்ற டைட்டிலில் அவரது யூ-ட்யூப் சேனலில் 4 நிமிட வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.