’பென்குயின்’ விமர்சனம்: ‘ராட்சசன்’ சாயலில் மற்றுமொரு படம்

Keerthy Suresh: கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.

By: June 19, 2020, 1:01:36 PM

Penguin Review and Rating: அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் எழுதி இயக்கி, கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் படம் பென்குயின். இந்த திரைப்படத்தை தனது ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் மூலம், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இதனை தயாரித்துள்ளார். பென்குயின் திரைப்படம் அமேசான் ப்ரைமில் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடிகை ஜோதிகாவின், பொன்மகள் வந்தாள் டிஜிட்டலில் வெளியாகியிருந்த நிலையில், அதே தளத்தில் வெளியாகி இருக்கும் இரண்டாவது திரைப்படம் இது.

பென்குயின்: வெளியாவதற்கு 2 மணி நேரம் முன்பே ரிலீஸ் செய்த தமிழ்ராக்கர்ஸ்

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தனது குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். ஒரு நாள் குழந்தை காணாமல் போகிறான், உடனே தனது கணவர் தான் மகனை கடத்தி இருக்க வேண்டும் என நினைக்கிறார். பின்னர் நாட்கள் கடந்து மகன் கிடைத்து விடுகிறான். அவனை கடத்தியது யார், எதற்காக என்பது தான் பென்குயின். மனிதர்களின் தவறான மனது கொடைக்கானல் அழகில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

கொலை, மர்மம், பயம் என த்ரில்லர் படத்துக்கான அம்சங்களுடன் படம் தொடங்குகிறது. முதல் கணவனை விட்டுப் பிரிந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, இரண்டாவது முறை கர்ப்பம் தரிக்கிறார் கீர்த்தி சுரேஷ். அதோடு காணாமல் போன மூத்த மகன், அஜய்யை தேடி அலைகிறார். முகமூடி அணிந்த கொலையாளிகள் இடம்பெறும் படங்களில் மட்டுமே பாதிக்கப்பட்டவர்கள் சுற்றித் திரிவார்கள். அதுவும் கர்ப்பத்தின் முக்கியமான கட்டத்தில் இருக்கும் ஒரு பெண், அடர்ந்த காடுகளில் அலைந்து திரிந்து தனது மகனை தேடுகிறார்.

கீர்த்தி சொல்லும் கதைகளுக்கு ஏற்றது போலவே படத்தின் காட்சிகளும் நகர்வது சுவாரஸ்யம். ஆனால், படம் கொஞ்சம் ராட்சசன் சாயல் இருப்பதை தவிர்க்க முடியவில்லை. அதோடு, படத்தில் ஒரு சில இடங்களில் லாஜிக் மீறல் காட்சிகளை கவனித்திருக்கலாம். அதே நேரத்தில் படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் அதிலும் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை மிரட்டியுள்ளது. கார்த்திக் பழனி ஒளிப்பதிவும் இரவின் அசத்தை கடத்துகிறது.

கொரோனா உறுதியா? கே.பி அன்பழகன் குறித்து வெளியாகும் தொடர் தகவல்களால் அதிமுக-வில் பதற்றம்!

ரசிகர்கள் சில இடங்களில் சில ஆறுதல்களை பெறலாம். ரத்த-சிவப்பு ஒளியில், இறந்த மனித பாகங்கள், கூர்மையான ஆயுதங்கள், வெறித்தனமான கொலையாளி, கறைபடிந்த அறையில் ஒரு நீண்ட வரிசையில் நறுக்கப்பட்ட சதை ஹாலிவுட் ஹூடூனிட் வகை படங்களை நேரடியாக ஞாபகப்படுத்துகிறது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Penguin review rating keerthy suresh amazon prime

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X