Advertisment

பேரன்பு படத்தை லீக் செய்தது தமிழ்ராக்கர்ஸ்

Tamilrockers Leaked Pernabu Full Movie Online: பேரன்பு படத்தை தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்தது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Peranbu in Tamilrockers

Peranbu in Tamilrockers

Tamilrockers Leaked Mammootty Starrer Peranbu Movie: இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பேரன்பு படத்தை தமிழ்ராக்கர்ஸ் லீக் செய்துள்ளனர்.

Advertisment

கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி படத்தை தொடர்ந்து, இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பேரன்பு. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளை அடக்க முடியாமல் துடிக்கும் பருவம் எய்திய மகளுக்கும், அவளை தனியாக வைத்துக் கொண்டு தடுமாறும் தந்தைக்குமான பாசப் போராட்டத்தை கருவாக கொண்டு வெளியான படம் “பேரன்பு”.

Peranbu in Tamilrockers : பேரன்பு படம் லீக்

கேரளா சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா உள்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த பேரன்பு படம், பல நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றது. பி.எல். தேனப்பன் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படம், பிப்ரவரி 1ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தை தமிழ்ராக்கர்ஸ் தங்களின் இணையதளத்தில் லீக் செய்துள்ளனர். சிறப்பாக அனைத்து தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை சில நாட்களிலேயே லீக் செய்திருப்பது படக்குழுவினரிடையே பெரும் மன வருத்ததை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Cinema Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment