ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது தமிழரின் படம்... மகிழ்ச்சியில் கோவை மக்கள்

Periods. End of Sentence nominated for Oscar : கோவையை சேர்ந்த தமிழர் ஒருவர் நடித்துள்ள பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் குறும்படம் ஆஸ்கர் பரிந்துரையில் இருப்பது தமிழர்களுக்கு மீண்டும் பெருமையை தேடிதந்துள்ளது.

2019ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான திரைப்படங்களை தேர்ந்தெடுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இதுவரை எந்த இந்திய படமும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. எனவே, இது சினிமா ரசிகர்களுக்கு ஏக்கமாகவே இருந்தது.

Periods. End of Sentence : பீரியட். எண்ட் ஆஃப் செண்டென்ஸ் படம் ஆஸ்கருக்கு தேர்வு

இந்நிலையில்தான், மாதவிடாய் குறித்த மூட நம்பிக்கைகளை இந்திய பெண்கள் எப்படி எதிர்த்து போராடுகிறார்கள் என்பது பற்றி ஈரானிய – அமெரிக்கரான ரைகா ஜெஹ்தாப்சி எடுத்துள்ள ‘பீரியட் எண்ட் ஆஃப் செண்டென்ஸ்’ என்கிற டாக்குமெண்டரி ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் உள்ள ஹார்பூர் எனும் பகுதியில் வசிக்கும் பெண்களிடம் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. இந்த டாக்குமெண்டரி வீடியோ 26 நிமிடங்கள் நீடிக்கிறது.

Periods. End of Sentence

விலை குறைந்த நாப்கினை தயாரிக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்த கோவையை சேர்ந்த அருணாச்சலம் முருகானந்தம் இந்த பீரியட் டாக்குமெண்டரியில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரத்தில்தான் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமர ‘பேட் மேன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

Periods. End of Sentence

அருணாச்சலம் முருகானந்தம்

தமிழ்நாட்டின் கோவையை சேர்ந்த அருணாச்சலம் புகழ் உலகம் முழுக்க கொடிக்கட்டி பரப்பது தமிழ் மக்களிடையே பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close