/tamil-ie/media/media_files/uploads/2018/12/periyar-kuthu.jpg)
Periyar Kuthu song released
Periyar Kuthu : பாடலாசிரியர் மதன் கார்கி வரிகளில் நடிகர் சிம்பு நடித்து பாடியிருக்கும் பெரியார் குத்து ஆல்பம் பாடல் இன்று மதியம் யூட்யூபில் வெளியானது.
'செக்க சிவந்த வானம்' படத்திற்குப் பிறகு ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி, நடனம், பாடல்களிலும் சிம்புவிற்கு அதிக விருப்பம் இருக்கும் காராணத்தால் அவ்வப்போது இவரே பாடல்களை பாடி ரிலீஸ் செய்வது வழக்கம். இதற்கு முன்னதாக அவர் பாடிய பீப் பாடலும் மிகப் பெரிய சர்ச்சையை உண்டாக்கியது.
Periyar Kuthu song released : சிம்பு பாடிய பெரியார் குத்து
ஆனால் இந்த முறை வேற மாதிரி களத்தில் இறங்கியிருக்கிறார் எஸ்.டி.ஆர். சமீபக் காலமாகவே சாதி, மதம் வேறுபாடுகளால் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாதிக்கு எதிராக குரல் கொடுத்த பல புரட்சியாளர்களில் ஒருவர் தந்தை பெரியார். அவரை போற்றும் வகையில், சிம்பு ஆல்பம் பாடல் ஒன்று பாடியிருக்கிறார்.
இந்த பாடலின் வரிகளை பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். கருப்பு சட்டை வேட்டி போட்டு, கிராஃபிக்ஸ் பெரியார் சிலை முன்னால் குத்தாட்டம் போடுகிறார் எஸ்.டி.ஆர். நாட்டின் பல்வேறு விஷயங்கள் பற்றி இந்த பாடலில் வரிகள் அமைந்துள்ளது.
தீபன் பூபதி மற்றும் ரத்தீஷ் வேலு ஆகியோர் தயாரித்துள்ள இந்த ஆல்பத்தை ரெபெல் ஆடியோ நிறுவனம் ரிலீஸ் செய்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.