கொரோனா வைரஸ் தாக்குதலால் கடந்த மார்ச் மத்தியிலிருந்து சின்னத்திரை மற்றும் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் தொலைக்காட்சிகளும், பழைய நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. பின்னர் ஊரடங்கு கணிசமாக தளர்த்தப்பட்டது. இருப்பினும் படபிடிப்புகளுக்கு அனுமதியில்லாமல் இருந்து. இந்நிலையில் நாளை முதல் சின்னத்திரை படபிடிப்புகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக முதல்வர், எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்த அனுமதியளித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இது சம்பந்தமாக, தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிக்கையில்,
”அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்தலாம்.
சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடம் முன் அனுமதி பெற வேண்டும். பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெற வேண்டும். நாளை முதல், அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை 31.5.2020 முதல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”