Advertisment

அமலா பாலின் ‘ஆடை’ படத்துக்கு தடைக்கோரி மனு

Aadai movie: பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
amala paul's Aadai movie, aadai release

ஆடை போஸ்டர்

Aadai Movie: நடிகை அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள ’ஆடை’ திரைப்படம் நாளை திரைக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தை ’மேயாதமான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் இயக்கியுள்ளார். வி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஜய் கார்த்திக் அண்ணா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் குமார் இசையமைத்துள்ளார்.

பெண்ணை மையப்படுத்திய இந்தப் படத்தில் அமலா பாலுடன் இணைந்து தொலைக்காட்சி தொகுப்பாளினி ரம்யா, விவேக் பிரசன்னா முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தணிக்கை குழுவினரால் ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்ட இந்தப் படம் நாளை (ஜூலை - 19) ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில், அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, டிஜிபி அலுவலகத்தில் மனு ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்திருக்கிறார் அமலா பால். சமூகத்தை சீரழிக்கும் இந்த மாதிரி படங்களை ரிலீஸ் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Cinema Amala Paul
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment