'ஏ' சான்றிதழ் வேண்டாம், 'யு/ஏ' கொடுங்க; நீதிமன்றத்தை நாடிய கூலி படகுக்ழு; ஃபேமிலி ரசிகர்களுக்கு சாதகமாகுமா?

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த மாஸ் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த மாஸ் ஆக்‌ஷன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

author-image
WebDesk
New Update
Screenshot 2025-08-20 132414

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கூலி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

Advertisment

திரைப்படம் வெளியாகும் முன்னரே இதற்கான எதிர்பார்ப்பு மிகவும் உயராக இருந்த நிலையில், படம் வெளிவந்தவுடன் ரசிகர்களிடையே அதிரடி வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆஃபிஸில் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பதிவுசெய்துள்ளது.

பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த மாஸ் ஆக்‌ஷன் திரைப்படம், ரஜினியின் ஸ்டைல், மாஸ் போன்ற உற்சாகத்தை மிக திறமையாக வெளிப்படுத்தி, ரசிகர்கள் மத்தியில் ஒரு திருப்திகரமான அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது.

லோகேஷின் இயக்க திறமை, அனிருத் இசை மற்றும் சண்டை இயக்கத்தின் நேர்த்தி என்று அணைத்து விஷயங்களும் இந்த படத்தில் அருமையாக உள்ளது.  இப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்தும் சாதகமான விமர்சனங்களை பெற்றுள்ளது.

Advertisment
Advertisements

படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதோடு, பல மாநிலங்களில் புதிய வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது.

இதன் மூலம், ‘கூலி’ இந்திய சினிமாவின் வரலாற்றில் இன்னொரு மைல்கல்லாக விளங்குகிறது.

இப்படம் மிகவும் அதிரடி மற்றும் வன்முறை காட்சிகளை கொண்டதாக இருப்பதால், மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் இத்திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளது.

இந்த சான்றிதழ் படத்தினை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கிறது என்பதால், குடும்பங்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுடன் படம் காண விரும்பும் பெற்றோர்கள் திரையரங்குக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடையே அதிருப்தி மற்றும் கலந்துரையாடலுக்கு வழிவகுத்துள்ளது. சமூக வலைதளங்களில் இது தொடர்பான பல கருத்துகள் பரவியுள்ளன.

இதனையடுத்து, சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம், குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் பார்க்கும் ரசிகர்களும் இந்த பட அனுபவத்தில் பங்கேற்க வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளது.

மேலும், இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கோரியுள்ளது. 

இந்த மனுவில், தற்போது படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், இதற்கான சான்றிதழை மாற்றுவது கூடுதலான பார்வையாளர்களை ஈர்க்கும் வாய்ப்பையும், குடும்ப ரசிகர்களுக்கு சினிமா அனுபவத்தை வழங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் என்று சன் பிக்சர்ஸ் வாதிட்டுள்ளது.

தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழை வழங்கிய முக்கிய காரணமாக படம் முழுவதும் வன்முறை காட்சிகள், கொலை மற்றும் அதிரடித் தாக்குதல்கள் நடக்கும் சம்பவங்கள் போன்றவை அடங்கியிருப்பதே குறிப்பிடத்தக்கது.

எனினும், படத்தின் பரபரப்பான வரவேற்பு மற்றும் வர்த்தக ரீதியான அம்சங்களை கருத்தில் கொண்டு, தணிக்கை சான்றிதழில் மாற்றம் கொண்டு வர முடியுமா என்பது தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது.

இந்தப் பின்நிலையைக் கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் இந்த மனுவை எந்த வகையில் அணுகுகிறது, மற்றும் எதிர்வரும் நாட்களில் 'கூலி' படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: