/tamil-ie/media/media_files/uploads/2022/02/valimai-final.jpg)
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று(பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியானது.
இதனையொட்டி, நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், நடனமாடியும் கொண்டாடி வந்தனர். காலை 5 மணிக்கு முதல் காட்சி என்பதால், வலிமை திரைப்படம் ஓடும் திரையரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில அதிகாலை 5 மணியளவில், கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கின் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது, அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், திடீரென பெட்ரோல் குண்டை ஒன்றை வீசிவிட்டு தப்பிச் சென்றனர்
/tamil-ie/media/media_files/uploads/2022/02/ba.jpg)
வாகன நிறுத்தும் இடம் அருகில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சேதமடைந்த வாகனத்தை ரசிகர்கள் உடனே அப்பறப்படுத்தியதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/va-1.jpg)
பைக்கில் வந்த மர்ம நபர்கள் குறித்து, சிசிடிவி காட்சிகள் மூலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.