/tamil-ie/media/media_files/uploads/2019/01/Petta-Box-Office-Collection.jpg)
Petta Box Office Collection
Petta 50 days Box office collection : அமெரிக்காவில் கூட வசூல் மன்னன் என்பதை பேட்ட படத்தின் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி பொங்கல் பண்டிகையின் சிறப்பு படமாக பேட்ட வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இப்படத்தில் ரஜினிகாந்த், த்ரிஷா, சிம்ரன், சசிகுமார் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுருதின் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
Petta Box office collection : பேட்ட வசூல்
இந்த படத்தின் ஆடியோ வெளியீடு நிகழ்ச்சியின்போதே இந்த படம் ரஜினியின் தீவிர ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றும், ரஜினியை ரசித்து ரசித்து படம் எடுத்திருப்பதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் வெளியான இந்த படம் தமிழகத்தை விட அமெரிக்காவில் இன்னும் வசூல் படைத்து வருகிறது. அமெரிக்காவிலும் ஜப்பானிலும் ரஜினிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே பல கோடிகளை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, அமெரிக்காவில் இந்த படம் 50 நாட்களில், $2,552,950 வசூலித்துள்ளது. அதாவது இந்திய ரூபாயின் விலையில் 18 கோடி 8 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசூலை திரட்டியிருக்கிறது. இதனால் படக்குழுவினர் செம்ம ஹாப்பி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.