15 நாளில் பேட்ட வசூலை அள்ளிக் குவித்த பேட்ட... காளியின் ஆட்டம் வேற லெவல்

Rajinikanth Starrer Petta Box Office Collection Day 15 : 11 நாட்களிலேயே சுமார் 100 கோடி வரையிலான வசூலை திரட்டியிருக்கிறது.

Petta Box Office Collection, Day 15 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் 15 நாட்களில் கோடிக்கணக்கில் வசூலை திரட்டியிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான படம் பேட்ட. ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, நவாஷுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன், பாபி சிம்ஹா, சசிகுமார் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருக்கின்றனர்.

Petta Box Office Collection : பேட்ட பாக்ஸ் ஆபீஸ்

பேட்ட படத்தின் மூலம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, இந்தியா உலகம் என அனைவரையும் 80’ஸ் காலங்களை போல் கட்டிப்போட்டார் ரஜினி. கடந்த 10ம் தேதி வெளியான இந்த படம், இந்தியா மட்டுமின்றி உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெற்றிநடை போடுகிறது.

பேட்ட படம், 11 நாட்களிலேயே சுமார் 100 கோடி வரையிலான வசூலை திரட்டியிருக்கிறது. இன்னும் சில நாட்களில் எளிதில் 200 கோடியை திரட்டும் என்றும் படக்குழுவினர் வட்டாரங்கள் தெரிவித்து வருகிறது.

இலங்கையில் மட்டுமே இந்த படம் சுமார் 3.02 கோடியை திரட்டியிருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் ஆராய்ச்சியாளர் ரமேஷ் பாலா கூறியிருக்கிறார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close