பேட்ட வசூல் குறித்து வெளியான தகவல்களால் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பதிவிட்ட ட்வீட் பலரின் கண்டங்களுக்கு தற்போது ஆளாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த பேட்ட திரைப்படமும், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளிவந்த விஸ்வாசம் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகின்றன.
பொதுவாகவே ஒரு படம் வெளியாகி முழுமையாக ஒரு வாரம் கடந்த பின்னரே பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்த தகவல்கள் தெரியவரும். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் ஹைப் என்ற பெயரின் படம் வெளியான முதல் நாளே இத்தனை கோடி அத்தனை லட்சம் என பாக்ஸ் ஆபீஸ் கணக்கை போட்டுவிடுகிறார்கள் சிலர்.
பேட்ட - விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் மோதல்... சன் பிக்சர்ஸ் டுவீட்
பேட்ட திரைப்படம் பல இடங்களில் விஸ்வாசத்தை விட அதிக வசூல் ஈட்டியிருந்தாலும், தமிழ்நாட்டில் தனது கொடியை உச்சத்தில் பறக்க விட்டுக் கொண்டிருப்பது விஸ்வாசம் தான் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது.
இது குறித்து பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்கள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ், அவர்களை கண்டித்து டுவீட் ஒன்றை போட்டுள்ளது. அதில் “இதுவரை வசூல் என்ன என்பது எங்களுக்கே சரியாக தெரியாது. அப்படியிருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும்? பொதுமக்கள் யாரும் இதனை நம்பி ஏமாற வேண்டாம். விடுமுறை நாட்களை புதுப் படங்கள் பார்த்து மகிழ்ச்சியாக இருங்கள்.” என குறிப்பிட்டுள்ளது.
January 2019
ஆனால் தல ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? சன் பிக்சர்ஸ் போட்ட இதே டுவீட்டிற்கு கீழ் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதில், “இதே பாக்ஸ் ஆபீஸ் ட்ராக்கர்ஸ் சர்க்கார் வசூல் குறித்து ட்வீட் செய்த போது அதனை ரி-டிவீட் செய்த நீங்கள் தற்போது பேட்ட விசயத்தில் இவ்வாறு நடந்து கொள்வது ஏன்?” என கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
January 2019
ரசிகர்கள் மத்தியில் இந்த மோதல் நடந்துக் கொண்டிருந்தாலும், பாக்ஸ் ஆபீஸ் கலென்க்ஷன் என்ற பெயரில் ஏற்படும் மோதல்களுக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது இந்த நிறுவனம்