Advertisment

பேட்ட படத்தை ரவுண்டு கட்டிய தமிழ்ராக்கர்ஸ்... உங்களை என்ன தான் செய்வது

Tamilrockers Leaked Petta Full Movie Online Starring Rajinikanth, Vijay Sethupathi: பேட்ட படம் லீக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
petta movie in tamilrockers

petta movie in tamilrockers

Tamilrockers Online Leaked 'Petta' Full Movie Just After its Release : ரஜினியின் பேட்ட படத்தை தீவிர பாதுகாப்புகள் மீறியும், தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் பேட்ட. முழுக்க முழுக்க ரஜினி ரசிகர்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் வரும் ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் ஆர்பரிக்கின்றனர்.

Rajinikanth's Petta Tamilrockers download, பேட்ட, தமிழ் ராக்கர்ஸ்Petta, பேட்ட டிரெய்லர் தேதி Petta in Tamilrockers: பேட்ட படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

Petta in Tamilrockers : பேட்ட படம் லீக்

படத்தில் ஆங்காங்கே வரும் சீன்கள் பழைய ரஜியை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. இதனாலேயே சில ரசிகர்கள் இந்த படத்தை மறுபடியும் பார்க்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக இன்று காலை கூட கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் அனைவரிடமும் கோரிக்கை வைத்தார்.

அதில், “யாரும் படத்தின் கதையை மட்டும் லீக் செய்து விட வேண்டாம்” என்றும் தெரிவித்திருந்தார். இப்படத்தை முறைகேடாக லீக் செய்ய நீதிமன்றம் இணையத்தளங்களுக்கு தடை விதித்தது.

ஆனால் இந்த தடைகளை மீறி இன்று வெளியான பேட்ட படத்தை தமிழ்ராக்கர்ஸ் தங்கள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெரும்பாலான தியேட்டர்களிலும் காவல்துறையே செக்கிங் செய்ய வந்திருந்தனர். பலரையும் படத்தை வீடியோ, ஃபோட்டோ எடுப்பது என அனைத்தையும் தடுத்து வந்தனர். இத்தகைய பாதுகாப்பு மீறியும் படம் லீக் ஆனது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

Tamil Cinema Rajinikanth Tamil Rockers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment