Petta Movie Review and celebrities Reactions : ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் பேட்ட படத்தை பார்த்து ரஜினிஃபைட் ஆன நடிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகழாரம்.
2.0 படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு முறை ரஜினியின் படத்தை தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ். சங்கரின் கிராஃபிக்ஸ் பிரம்மாண்டத்தில் பல கோடிகளை வசூலித்தது 2.0. அந்த சாதனையை முறியடிக்க மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறார் சூப்பர்ஸ்டார்.
Petta Movie Review and celebrities Reactions : பேட்ட படம் குறித்து பிரபலங்கள் கருத்து
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி என பலரும் இணைந்து எண்ட்ரி கொடுத்திருக்கும் பேட்ட படத்தை பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் பார்த்து வருகின்றனர். பேட்ட பராக் என்பது ரசிகர்களுக்கு எவ்வளவு உற்சாகத்தை தரும் என்பதை திரை பிரபலங்களும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
நடிகர் தனுஷ் :
“பேட்ட ஒரு காவியம்... சூப்பர் ஸ்டார்... லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். பெரிய பெரிய நன்றி. நிஜமாகவே ரஜினிஃபைட் ஆகிட்டோம்.. அனிருத்.. பெஸ்ட் பிஜிஎம்.. பேட்ட பராக்!!!!”
January 2019
நடிகை கஸ்தூரி :
“இண்டர்வல் பிளாக்... மாஸ் மரணம்!
தலைவர் ரஜினிகாந்த் சூப்பர் ஹாட் சூப்பர் யங் சூப்பர் ஸ்டைல்
ஒவ்வொரு ஷாட்டும் அற்புதம். கார்த்துக் சுப்புராஜ் நன்றி”
January 2019
இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்:
“கனவு நினைவாகும்போது.. சன் பிக்சர்ஸ் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் நன்றி.”
January 2019
இயக்குநர் சுசீந்திரன்:
பேட்ட படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்திருக்கும் சசிகுமார் மற்றும் விஜய் சேதுபதிக்கு வாழ்த்து தெரிவித்தார்.