Advertisment

Petta movie review and release : சரவெடியுடன் பேட்ட பராக்... ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

Petta movie review and release : உலகம் முழுவதும் இன்று பேட்ட பராக்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Petta movie review and release

Petta movie review and release

Petta movie review and release : பன்மொழிகளில் வெளியாகியிருக்கும் பேட்ட படத்தை அதிகாலை முதலே ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர். சென்னை காசி தியேட்டரில் காலைக் காட்சியை காண வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் முற்றுகையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisment

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷல் ரிலீஸ் படமாக உலகம் முழுவதும் இன்று வெளியான படம் பேட்ட. சங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 திரைப்படம் உலகம் முழுவதும் பெறும் வரவேற்பை பெற்றது. தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியான 2.0 படம், தமிழுக்கு அடுத்ததாக தெலுங்கில் தான் வசூலை அள்ளிக் குவித்தது.

இதனை தொடர்ந்து கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், பொங்கலுக்கு வெளியாக காத்திருக்கும் படம் பேட்ட. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் பேட்ட படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி, ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்காமல் திணறடித்து வருகிறது.

Petta movie review and release : பேட்ட பொதுமக்கள் விமர்சனம்

பன்மொழிகளில் வெளியாகியிருக்கும் பேட்ட படத்தை அதிகலை முதலே ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

12:30 PM: சென்னை ராயப்பேட்டையில் உள்ள உட்லண்ஸ் திரையரங்கத்தில், பேட்ட திரைப்பட வெளியீட்டு விழாவை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சார்பில் இலவச திருமணம் நடத்தி வைத்தனர். அன்பு , காமாட்சி என்ற அந்த ஜோடிக்கு, திரையரங்க வளாகத்திலே வேத மந்திரங்கள் , மேள தாளங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து , புதுமண ஜோடிகள் கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

12: 20 PM: சென்னை காசி தியேட்டரில் காலைக் காட்சியை காண வந்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை ரசிகர்கள் முற்றுகையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

11.00 AM : சென்னை ரோகினி தியேட்டரில், ரஜினி ரசிகர்கள் பலரும் பேட்ட டிஷர்ட் அணிந்து வந்தனர்.

10.30 AM : பேட்ட படத்தை பார்த்து பொதுமக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் புகழ்ந்து வருகின்றனர்.

Petta Movie Review : லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க... நடிகர்கள் புகழாரம்

10.00 AM : தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்களிலும் ரஜினி ரசிகர்கள் முதல் ஷோவை பார்க்க ஆர்வமாக காத்திருந்தனர்.

9.30 AM : படத்தை பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் பலரும் “பேட்ட தரமான ரஜினியின் கிளாசிக் படம்” என்று புகழ்ந்து தள்ளினர்.

9.00 AM : ரஜினியின் மருமகன் மற்றும் நடிகருமான தனுஷ் பேட்ட படம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். அதில், “பேட்ட ஒரு காவியம்... சூப்பர் ஸ்டார்... லவ் யூ தலைவா... தரமான சம்பவம் செஞ்சிட்டீங்க. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள். பெரிய பெரிய நன்றி. நிஜமாகவே ரஜினிஃபைட் ஆகிட்டோம்.. அனிருத்.. பெஸ்ட் பிஜிஎம்.. பேட்ட பராக்!!!!” என பதிவிட்டிருக்கிறார்.

8.50 AM : பேட்ட படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரசிகர்கள் அனைவரும் தியேட்ட முன்பு வெடி வெடித்து, குத்தாட்டம் போட்டு கொண்டாடி வருகின்றனர்.

8.30 AM : இன்று அதிகாலை முதலே ரஜினி ரசிகர்கள் அனைவரும் தியேட்டர் முன் அலைமோதினர். நீயா நானா என முந்தியடித்துக் கொண்டு திரையரங்குகளுக்கு சென்றனர்.

Tamil Cinema Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment