/tamil-ie/media/media_files/uploads/2018/12/petta-rajinikanth.jpg)
Siruthai Siva to direct Rajinikanth, sun pictures
Petta Movie Trailer Date: ரஜினிகாந்தின் பேட்ட படம் தொடர்பாக புதிய அப்டேட்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது. அதன்படி ரஜினியின் ஸ்டைலான புதிய கெட்டப் போஸ்டரையும், டிசம்பர் 28-ம் தேதி படம் டிரெய்லர் வெளியாகிற தகவலையும் வெளியிட்டிருக்கிறது.
ரஜினிகாந்த் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் பேட்ட. இதனை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். நடிகைகள் சிம்ரன், திரிஷா நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.
பொங்கல் ரிலீஸாக பேட்டை வருகிறது. ஒருவேளை சில தினங்களுக்கு முன்பாகவே பேட்ட வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தச் சூழலில் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்தாக பேட்ட படத்தின் புதிய ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கிறது.
புதிய ஸ்டில்லில் ரஜினிகாந்த், ரஜினிகாந்த் கூலிங் கிளாஸ் அணிந்தபடி வலதுபுறமாக திரும்பிப் பார்த்துக்கொண்டு ஸ்டைலாக நடந்து வரும் காட்சி இருக்கிறது. 1990-களில் பார்த்த ரஜினியை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்தப் படம்!
அதோடு, டிசம்பர் 28-ம் தேதி பேட்ட படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்கிற அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் தெரிவித்திருக்கிறது. புத்தாண்டு அன்று ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசாக டிரெய்லர் வெளியிட வாய்ப்பு இருப்பதாகவே ரஜினி வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால் 3 நாட்களுக்கு முன்னதாக டிரெய்லர் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படம் ரிலீஸ் தேதியும் பொங்கலுக்கு முந்துமோ? என்கிற கேள்வி அதிகரித்தப்படி இருக்கிறது.
ஏற்கனவே பேட்ட படத்தின் சிங்கிள் டிராக், டீசர் ஆகியன வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.