96 படத்தில் மஞ்சள் சுடிதார் போட்ட ஜானுவா இது? என கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கிறது சன் பிக்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் த்ரிஷா லுக் போஸ்டர்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கி பொங்களுக்கு ரிலீசாக தயாராக உள்ள பேட்ட படத்தின் கதாநாயகன் ரஜினிகாந்த் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஜீன்ஸ் பேண்ட், ஸ்கார்ஃப் என்று ஸ்டைலாக இருக்கும் ரஜினி ஒரு மாஸ் என்றால், பட்டு வேட்டி சட்டையில் கெடா மீசையுடன் இருக்கும் ரஜினி வேற லெவல் கெத்து.
பேட்ட த்ரிஷா லுக் ரிலீஸ்
இந்த இரண்டு போஸ்டர்களுமே பயங்கர வைரலான நிலையில், மாடர்ன் ரஜினிகாந்த் சிம்ரனுடன் இருக்கும் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் ரிலீஸ் செய்தனர். கையில் பூத்தொட்டி வைத்திருக்கும் சிம்ரன் - ரஜினிகாந்த், ஒன்றாக நடந்து வரும் போஸ்டர் ரஜினி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இன்று பேட்ட படத்தின் இசை வெளியீடு விழா நடக்க இருக்கும் நிலையில், சன் பிக்சர்ஸ் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் த்ரிஷா லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். போஸ்டருடன், திரிஷாவின் பெயர் சரோ என்றும் வெளியாகியுள்ளது.
December 2018
இதில், பட்டு வேட்டிய கட்டியிருக்கும் கெடா மீசை ரஜினி பின்னிருந்து ஊஞ்சலாட்ட, நீலம் பார்டர் வைத்த சிவப்பு புடவையில் மிளுரும் த்ரிஷா அமர்ந்திருக்கிறார். இந்த போஸ்டர் ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி திரிஷா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. பலரும் 96 படம் ஜானுவையே சரோ ஓவர்டேக் செய்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.