Petta New Poster: சூப்பர்ஸ்டார் ரஜினியின் நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும், பேட்ட படத்தின் மற்றொரு லுக் இன்று வெளியிடப்பட்டது.
2.0 படத்தைத் தொடர்ந்து, ரஜினி நடித்து வரும் திரைப்படம் ‘பேட்ட’. பீட்சா, ஜிகர்தண்டா போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தி இயக்கி வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் டீசர், ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் என வெளியான அனைத்தும் நல்ல ரீச் ஆகியுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் மற்றொரு லுக் வெளியிடப்பட்டுள்ளது.
தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இதனை வெளியிட்டுள்ளது. ஆனால், இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில், அந்த லுக்கில் ‘பொங்கலுக்கு பராக்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது தான்.
#PettaPongalParaak
@rajinikanth @karthiksubbaraj @SimranbaggaOffc @anirudhofficial @VijaySethuOffl @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers pic.twitter.com/rPxBgZNqKi— Sun Pictures (@sunpictures) 14 November 2018
முன்னதாக, அஜித்தின் விஸ்வாசம் பொங்கல் தினமான 14ம் தேதி வெளியாகும் என்றும், அதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக, அதாவது 10ம் தேதி ‘பேட்ட’ படம் ரிலீசாகும் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், ‘பேட்ட’ பொங்கலுக்கு வருகிறது என தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதால், விஸ்வாசம் எப்போது ரிலீசாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரஜினி படம் என்றாலே, பெரும்பாலான தியேட்டர்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுவிடும் என்பதால், அஜித்தின் விஸ்வாசம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படி ஒருவேளை இரு படங்களும் ஒன்றாக ரிலீசானால், தியேட்டர்கள் கிடைப்பதில் பெரும் யுத்தமே நிகழும் என்று தெரிகிறது. இதனால், நிச்சயம் இரு படங்களின் வசூலும் பாதிக்கும் என்றே கூறப்படுகிறது. ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமாக அமைந்தாலும், தியேட்டர்காரர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் தான் இதில் பெரிதாக பாதிக்கப்படுவார்கள் என்பதே உண்மை.