New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/a11.jpg)
ரஜினிகாந்த் - Rajinikanth
'மாடர்ன் டைப் பாட்ஷா'
ரஜினிகாந்த் - Rajinikanth
'ஜிகர்தண்டா' படத்தைப் பார்த்து கார்த்திக் சுப்புராஜை அழைத்துப் பாராட்டிய ரஜினி, அப்படத்தில் வரும் 'அசால்ட் சேது' கதாபாத்திரத்தை 'என்னை கேட்டிருந்தால் நானே செய்திருப்பேன்' என்று சொன்னாராம். அந்த அளவிற்க்கு அது ஸ்டைல் கேரட்டராக இருந்ததாக ரஜினி சொன்னதற்க்கு, கார்த்திக் சுப்புராஜ் 'சார் நான் அந்த கேரக்டரையே உங்களின் பழைய பட வில்லத்தனத்தை பார்த்து செய்ததுதான்' என்று சொன்னாராம். கார்த்திக் சுப்புராஜ் அதிதீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்க அவரை வைத்துப் படம் இயக்க வாய்ப்பு கிடைத்தால் சும்மா விடுவாரா?
ரஜினி ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் என்றாலே ஆக்க்ஷன் மூவி பாட்ஷா தான். பாட்ஷா டைப் படம் 40 வயதுக்கு மேற்பட்ட ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக பழைய ஆக்ஷன் ரஜினியை இந்த தலைமுறை பார்க்கவில்லை.
இதை நன்றாக உணர்ந்துள்ள கார்த்திக் சுப்புராஜ் அடிக்கடி தனது ட்விட்டரில் பயமா?எங்களுக்கா? தலைவா மரணமாஸ் என்று தொடர்ந்து பதிவிட்டிருந்தார்.
#PettaFirstSingle .. The #MaranaMass from Dec 3rd... Just 2 days to go...
Can't wait for u all to listen to #ThalaivarKuththu
An @anirudhofficial musical.... pic.twitter.com/J3Nns463sO
— karthik subbaraj (@karthiksubbaraj) December 1, 2018
மேலும் பேட்ட படத்தின் முதல் மோஷன் போஸ்டர் வெளியான அன்று லதா ரஜினிகாந்த், 'மாடர்ன் டைப் பாட்ஷா' என்று குறிப்பிட்டிருந்தார். கார்த்திக் சுப்புராஜ் தீவிர ரஜினி ரசிகர், ட்விட்டரில் மரணமாஸ் டயலாக், அதற்கு லதா ரஜினிகாந்த் ஒப்புதல் என்று பர்த்தால் இன்று வெளிவந்திருக்கும் பேட்ட ஸ்டில், இந்த தலைமுறையின் மரண மாஸ் பாட்ஷாவாக இருக்கலாம் என்று சொல்லத் தோன்றுகிறது.
பேட்ட படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் திங்கள் அன்று வெளியாகவிருக்கும் நிலையில், ரஜினியின் இந்த நியூ லுக்கை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.
திராவிட ஜீவா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.