Petta Movie: பேட்ட ... ரஜினிகாந்த் புதிய படம்: பேட்ட ..! ரஜினிகாந்த் படத்தின் பெயர், மோஷன் போஸ்டர் வெளியிட்டது சன் பிக்சர்ஸ்! கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகும் மாஸ் படம் இது! த்ரிஷா, சிம்ரன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது!
பேட்ட படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் பிரமாண்டமும் எதிர்பார்க்கப்படுகிறது.
Petta Movie: பேட்ட , ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படம் ஃபர்ஸ்ட் லுக்!
Petta Movie: பேட்ட ... ரஜினிகாந்த் புதிய படம், மோஷன் போஸ்டர்:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் புதிய படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு இன்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது!
பேட்ட ..! ரஜினிகாந்தின் புதிய படத்தின் பெயர் இதுதான்! இதில் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று (செப்டம்பர் 7) மதியம் ஒரு முக்கிய அறிவிப்பு மாலை 6 மணிக்கு இருப்பதாக சன் பிக்சர்ஸும், கார்த்திக் சுப்புராஜும் சஸ்பென்ஸ் வைத்தனர்.
மாலையில் படத்தின் தலைப்பையும், மோஷன் போஸ்டரையும் அடுத்தடுத்து வெளியிட்டு அதிர வைத்தனர். ரஜினிகாந்த் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு செம தீனியாக ‘பேட்ட’ தலைப்பு அமைந்திருக்கிறது.
அண்மை ஆண்டுகளாக அடித்தட்டு மக்களை சென்றடையும் வகையில் ரஜினியின் படத்தலைப்புகள் அமைந்து வருகின்றன. ‘பேட்ட’ தலைப்பும் அந்த வகையிலேயே தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.