Rajinikanth’s Petta Movie Release Date: ஆயிரம் தீபாவளி, பொங்கல் வந்து போகலாம். ரஜினிகாந்த் ரசிகர்களைப் பொறுத்தவரை, அவரது படம் ரிலீஸாகிற நாட்கள்தான் தீபாவளி… பொங்கல்..!
சுமார் 40 வருடங்களாக நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் நீடித்தாலும், அவர் படங்கள் நீண்ட இடைவெளியிலேதான் வந்து கொண்டிருந்தது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகைகளுக்கு படம் வெளியாகி 20 வருடங்களைக் கடந்துவிட்டது.
#AahaKalyanam Lyrical video HD stills!#PettaPongal2019 pic.twitter.com/bQmHacAqco
— Sun Pictures (@sunpictures) 21 December 2018
கடைசியாக 1995ம் வருடம் ஜனவரி 11 ம்-தேதி பொங்கலுக்கு முன் பாட்ஷாவும், அதே வருடம் தீபாவளிக்கு முத்து படமும் வந்தன. இடையில் இருபத்தி மூன்று வருடங்களாக இவர் படம் வந்தால் மற்ற நடிகர்களின் படங்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்கிற குமுறல் காரணமாக, ரஜினி தனது படத்தை வெளியிடவில்லை.
குறிப்பாக விநியோகஸ்தர்கள், படத் தயாரிப்பாளர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று பெரிய பண்டிகை தினத்தன்று படத்தை வெளியிடாமல் சாதாரண நாளிலேயே தனது படம் வெளிவரும்படி பார்த்துக் கொண்டார். கடைசியக வந்த 2.0 வரை இதேவழக்கம் தொடர்ந்தது.
1978-ம் ஆண்டு முதல் தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்துகொண்டிருந்த ரஜினி, 1990-ல் தீபாவளிக்கு படம் ரிலீஸ் செய்யவில்லை. அந்த வருடம் மதுரையில் இந்த வருடம் எங்கள் தலைவர் படம் ரிலீசாகாத இந்த தீபாவளி எங்களுக்கு கருப்பு தீபாவளி, துக்கதினம் என்று போஸ்டர் அடித்து ஒட்டினர் ரசிகர்கள். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த அளவிற்கு தீபாவளி ரிலீஸ் கிரேஸ் இருந்த காலகட்டத்திலேயே பண்டிகை ரிலீசை தவிர்த்து வந்தார். ஆனால் தற்போது அந்த முடிவை மாற்றியுள்ளார் ரஜினி. தற்போதும் ரஜினிக்கான ஓப்பனிங்கும், ஆடியன்ஸும் முன்புபோலவே இருப்பது தெரிந்த சங்கதி. எனவே இந்த வருட பொங்கல், தீபாவளி பண்டிகையை அவர் ஆக்கிரமித்துக் கொண்டால் எங்கள் நிலை என்னாவது? என்கிற குரல் எழும்புகிறது. நடிகர் சங்கத்தில் இருக்கும் சிலர் மூலமாக மறைமுகமாக எதிர்ப்புக் குரலை எழுப்ப இரண்டாம் கட்ட நடிகர்கள் சிலர் தயாராகி வருகிறார்கள்.
தங்களை சூராதி சூரர்களாக சித்தரிக்கும் முன்னணி நடிகர்கள் சிலர் இது போன்ற தருணங்களில் தங்கள் தலைவர் படத்துடன் மோதி ஜெயிக்கட்டுமே… என்பதுதான் ரஜினி ரசிகர்களின் குரல்! ஆனால் சூப்பர் ஸ்டார் என்ன முடிவு எடுப்பார்? ஒருவேளை பொங்கலுக்கு சில தினங்களுக்கு முன்னதாகவே படத்தை வெளியிட பச்சைக் கொடி காட்டிவிடுவாரோ?
திராவிட ஜீவா
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Petta release date rajinikanth