பொங்கலுக்கு முன்பே வெளியாகிறதா பேட்ட? கசியும் முக்கிய தகவல்

பேட்ட படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது

Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல்
Petta Box Office Collection, பேட்ட தியேட்டர் வசூல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட திரைப்படம் பொங்கலுக்கு முன்பாக ஜன.10ம் தேதியாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க – பேட்ட vs விஸ்வாசம்: பொங்கல் போட்டியால் விழிபிதுங்கும் தியேட்டர் அதிபர்கள்

பொங்கல் பண்டிகைக்கு ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் ஆகிய இரு பெரும் படங்கள் ரிலீசாவது உறுதியான பின், இரு படத்திற்கும் எவ்வளவு தியேட்டர்கள் கிடைக்கும்? என்ற பெரும் குழப்பம் நீடித்தது. ஒரே நாளில் ரிலீசானால், இரு படங்களின் வசூலும் பாதிக்கப்படும் என்பதால், யார் ரேஸில் முந்துவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், பேட்ட படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பொங்கலுக்கு முன்னதாக 10-ம் தேதி அல்லது 11-ம் தேதி பேட்ட படம் திரைக்கு வர இருப்பதாக தெரிகிறது.

10-ம் தேதி வியாழக்கிழமை என்பதால், விடுமுறை நாட்களை கணக்கில் வைத்து பேட்ட படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் பேட்ட படத்தின் ஓவர்சீஸ் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த ஆவணம் ஒன்று சமூக தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்னும் படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க – வாவ்…! ‘விஸ்வாசம்’ பிசினஸ் எத்தனை கோடி தெரியுமா?

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Petta release date rajinikanth

Next Story
Kanaa in Tamilrockers: ‘கனா’ படத்தையும் விட்டு வைக்காத தமிழ் ராக்கர்ஸ்Tamilrockers Leaked Kanaa Movie:தமிழ் ராக்கர்ஸ் வெளியிட்ட கனா
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express