scorecardresearch

Petta Second Look: சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியானது!

‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

Petta Second Look: சூப்பர்ஸ்டாரின் ‘பேட்ட’ செகண்ட் லுக் வெளியானது!
petta second look poster

Petta Second Look: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. இப்படத்திற்காக, பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பிறகு ரஜினி தங்கியிருந்த ஹோட்டலுக்கு கூட ரஜினிகாந்த் என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது லக்னோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்தின் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில், லக்னோவில் அவர் படத்திற்கான ஷூட்டிங் நடப்பது இதுவே முதன்முறை என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.

Petta Second Look : பேட்ட செகண்ட் லுக்

சமீபத்தில் இப்படத்தின் மோஷன் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், இன்று இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இதில், கெடா மீசையுடன், வெள்ளை சட்டையுடன் படு ஸ்டைலிஷாக ரஜினி போஸ் கொடுத்திருக்கிறார்.


இப்போதே, சூப்பர்ஸ்டாரின் செகண்ட் லுக் போஸ்டர் செம வைரல் ஆகியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Petta second look released