Petta Teaser Release As Rajinikanth's Birthday Special : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு இன்று (டிசம்பர் 12) பேட்ட டீசர் ரிலீஸ் செய்து ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் கொடுக்கிறது சன் பிக்சர்ஸ். இந்த டீசர் முழுக்க ரஜினிகாந்த் பிறந்த நாள் ஸ்பெஷலாக அமையும் என்றும் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. டீசரில் ரஜினிகாந்த் ஸ்டைலாக கண்ணாடியை கழற்றி மாட்டும் காட்சியும் உண்டு. ரசிகர்கள் இந்த டீசரை சமூக வலைதளங்களில் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
Advertisment
இதோ ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியான பேட்ட டீசர்: இந்த டீசரில் ‘மரணம், மாஸூ மரணம்’ பாடலின் சில வரிகள், ரஜினிகாந்தின் ஸ்டைல் நடை, ‘ஹா.. ஹா..’ காந்தச் சிரிப்பு ஆகியன இடம் பெற்றிருக்கின்றன.
ரஜினிகாந்த் பிறந்தநாள் என்றாலே ரசிகர்களுக்கு திருவிழா தான். ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் ரஜினி பிறந்தநாளில் அவருக்காக கோவில்களில் பூஜை செய்வதும், வேண்டுதல்களை நிறைவேற்றுவது என சிறப்பாக கொண்டாடி வருவார்கள்.
Petta Teaser Release : ரஜினிகாந்த் பிறந்தநாள்
நடிகராக இருந்தபோதே சிறப்பு கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு இதே பிறந்தநாளன்று அவரின் அரசியல் பிரவேசம் குறித்து அறிவித்தார். அன்று முதல் இவர் எந்த மேடையில் பேசினாலும் அரசியல் குறித்த அறிகுறியையே தேடி வருகின்றனர்.
கடந்த ஞாயிறுகிழமை நடந்த பேட்ட இசை வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியின் பொலிடிக்கல் எண்ட்ரி என்ற சொன்னவுடன் அரங்கமே அதிர்ந்தது. இதனை ரீயல் பாகுபலி மொமெண்ட் என்றும் ரசிகர்கள் வர்ணித்து வந்தனர்.
அதே மேடையில் பேசிய ரஜினிகாந்த், “பிறந்தநாள் வரப் போகிறது. இந்த பிறந்தநாளுக்கும் நான் வீட்டில் இருக்க மாட்டேன். போன வருடமே நிறைய பேர் வந்து ஏமாற்றம் அடைந்தீர்கள். இந்த வருடமும் நான் இருக்க மாட்டேன். யாரும் வரவேண்டாம்” என்றார். அவரின் இந்த சொற்கள் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Petta Teaser Release : பேட்ட டீசர் ரிலீஸ்
ஆனால் ரஜினிகாந்த் பிறந்த நாளான இன்று (டிசம்பர் 12) அவரை காண வேண்டும் என்ற ரசிகர்களின் ஏக்கத்தையெல்லம் தீர்த்து வைக்க வந்திருக்கிறது காளியின் தரிசனம். படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் பேட்ட படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவித்தனர்.
இன்று (12-ம் தேதி) காலை 11 மணிக்கு இந்த டீசர் வெளியானது. இதையொட்டி சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்த டீசர் முழுக்க ரஜினிகாந்தின் பிறந்த நாள் ஸ்பெஷலாக’ வருவதாக குறிப்பிட்டது.
ரஜினி ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால், இது சும்மா காளி ஆட்டத்தின் டீசர் தான் மெயின் பிக்சர் பொங்கலுக்கு வருது. அதற்கிடையே இதுபோல தொடர்ந்து பரபரப்பைக் கிளப்பும் அறிவிப்புகள் பேட்டயை மையமாக வைத்து சுழன்று கொண்டுதான் இருக்கும்.
ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவசரமாக இந்த டீசர் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதைவிட மாஸாக இன்னொரு டீசரை சில தினங்களில் படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
எனினும் இந்த டீசர் வெளியாகி 5 நிமிடங்களில் ஒரு லட்சத்து எண்பதாயிரம் வியூஸ்ஸை அள்ளியது. தொடர்ந்து ரசிகர்கள் டீசரை மொய்த்து வருகிறார்கள்.