Box Office Collection- Petta vs Viswasam: பொங்கல் ரிலீஸ் படங்களான பேட்ட, விஸ்வாசம் இடையிலான பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் வென்றது யார்? என்பது குறித்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி பேட்ட, விஸ்வாசம் படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தல அஜீத் படங்கள் வெளியானதால் இரு தரப்பு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளானார்கள்.
முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரங்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, விஸ்வாசம் அதிக படங்களில் திரையிடப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இந்தத் தரப்பினர் வெளியிடும் புள்ளி விவரங்கள் அடிப்படையில் தமிழ்நாட்டில் முதல் நாளில் விஸ்வாசம் 26 கோடி ரூபாயையும், பேட்ட 22 கோடி ரூபாயையும் வசூலித்திருப்பதாக கூறுகிறார்கள்.
Petta vs Viswasam- Box Office Collection Details: பேட்ட - விஸ்வாசம் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
ஆக, பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் தலைவரை தல ஜெயித்து விட்டதாக இவர்கள் மார் தட்டுகிறார்கள். ஆனால் இந்தத் தரப்பே வெளிநாடுகளிலும், அண்டை மாநிலங்களிலும் விஸ்வாசத்தை விட பேட்ட அதிக வசூல் செய்திருப்பதாக ஒப்புக் கொள்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்காவில் பேட்ட படத்தின் முதல் நாள் வசூல் ஏழரை லட்சம் டாலர் என்றும், விஸ்வாசம் கலெக்ஷன் 36,000 டாலர் என்றும் குறிப்பிடுகின்றனர். இதேபோல மலேசியா, ஜெர்மனி என பல நாடுகளிலும் பேட்ட கலெக்ஷன் முன்னால் நிற்கிறது. ஆக, ஒட்டு மொத்த முதல் நாள் கலெக்ஷனில் பேட்ட முந்துவதாகவும், தமிழ்நாடு முதல் நாள் கலெக்ஷனில் விஸ்வாசம் ஜெயித்துவிட்டதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.
Scenes Outside KStheatre at Salem for today's Booking #Petta#PettaPongalParaak#ThalaivarinPetta #ThalaivarRBSI @RBSIRAJINI #PakkaThalaivarMovie #RBSI pic.twitter.com/xfJYQ7etjn
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) 11 January 2019
ஆனால் இன்னொரு தரப்பு குறிப்பிடும் புள்ளி விவரம் வேறு மாதிரி இருக்கிறது. இது தொடர்பாக திரை விமர்சகர்களில் ஒருவரான திராவிட ஜீவா கூறுகையில், ‘தமிழ்நாடு முழுவதும் சினிமா திரையிடும் நிலையில் உள்ள தியேட்டர்களின் எண்ணிக்கை சுமார் 1100. இவற்றில் பேட்ட 614 தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
சென்னை உள்ளிட்ட நகரங்களின் மல்டி பிளெக்ஸ்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்கிரீன்கள் இருப்பதால், பேட்ட மொத்தம் சுமார் 800 ஸ்கிரீன்கள் திரையிடப்பட்டது. விஸ்வாசம் படம் திரையிடப்பட்டதே சுமார் 550 ஸ்கிரீன்கள்தான். தவிர, சென்னை உள்பட பெரு நகரங்களில் அதிக பார்வையாளர்கள் உட்காரும் வசதி கொண்ட பெரிய ஸ்கிரீன்கள் அனைத்தும் பேட்ட படத்திற்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இரு படங்களும் முதல் நாள் ஹவுஸ் ஃபுல் என வைத்துக்கொண்டாலும், பேட்ட வசூல்தான் அதிகம்!
இந்த வகையில் பேட்ட படத்தின் தமிழ்நாடு முதல் நாள் வசூல் 36 கோடி. விஸ்வாசம் படத்தின் வசூல் 24 கோடி! சென்னை மாநகரை மட்டும் எடுத்துக்கொண்டால் பேட்ட முதல் நாள் வசூல் 1.58 கோடி. விஸ்வாசம் வசூல் 88 லட்சம்.
#Viswasam Day1 Worldwide BO Collection Details>
•Tamil Nadu: 26.7Cr
•Karnataka: 2.25Cr
•Kerala: 1.22Cr
•ROI: 1.85Cr
•Overseas: 11.2Cr
Total: : ₹43.22Cr ????#ViswasamDay1WWCollection— AJITHKUMAR FANS CLUB (@ThalaAjith_FC) 11 January 2019
2-வது நாளில் தமிழ்நாடு முழுவதும் பேட்ட படத்திற்கு 100 ஸ்கிரீன்கள் அதிகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதேசமயம் விஸ்வாசம் படத்திற்கு ஸ்கிரீன்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. எனவே 2-வது நாள் முதல் விஸ்வாசம் கலெக்ஷன் இன்னும் குறையும்.
அதேசமயம் ரஜினி படங்களைத் தவிர்த்து தமிழக அளவில் பெரிய கலெக்ஷனை நோக்கி விஸ்வாசம் பயணிக்கிறது என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அந்த வெற்றிக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் உள்பட பல காரணங்கள் இருக்கின்றன.’ என்கிறார் திராவிட ஜீவா.
எனினும் முதல் நாள் வசூல் குறித்து இரு படங்களின் தயாரிப்பாளர்களோ, ரசிகர் மன்றத்தினரோ அதிகாரபூர்வமாக எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. ரசிகர் மன்றம் சாராத பொதுவான விமர்சகர்கள் சிலரும் முதல் நாள் கலெக்ஷனில் தமிழகத்தில் விஸ்வாசம் முதல் இடத்தையும், ஒட்டு மொத்தமாக உலகம் முழுவதும் பேட்ட முதல் இடத்தையும் பெற்றிருப்பதாக குறிப்பிடுகிறார்கள்.
2.0 கலெக்ஷனை லைகா புரடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்த மாதிரி, பேட்ட கலெக்ஷனை சன் பிக்சர்ஸும், விஸ்வாசம் கலெக்ஷனை சத்யஜோதி பிலிம்ஸும் அறிவித்தால் தெளிவு பிறக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.