சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் விஸ்வாசம். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று ஷூட்டிங் தொடங்கும் போதே அறிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது ரஜினியின் பேட்ட படமும் பொங்கலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு வியாபாரமே முடிந்துவிட்டது. இது விஸ்வாசம் படக்குழுவுக்கு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. தியேட்டர் உரிமையாளர்களைப் பொறுத்தவரை ரஜினியின் பேட்ட படத்திற்கே முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறார்கள்.
இது தொடர்பாக சென்னை மாநகர திரையரங்க முக்கிய பிரமுகரும், பிரபல விநியோகஸ்தருமான ஒருவரைக் கேட்டபோது, ‘என்னதான் இளம் தலைமுறை நடிகர்கள் என்றாலும் அஜித், விஜய்யின் மார்க்கெட்டைவிட ரஜினியின் மார்க்கெட் பெரியதுதான். அதுவும் எந்த நடிகர் படம் வந்தாலும் ரஜினி படம் வரும் போது தியேட்டர்கள் கிடைப்பது உட்பட வசூல் ரீதியான பின்னடைவை பிற நடிகர்களின் படங்கள் சந்திக்கும் என்பதும் உண்மைதான்.
2.O Box Office Collection: சென்னையில் மட்டும் 80 ஸ்கிரீன்கள்... இதுவரை ரூ 30 கோடி
அதேநேரத்தில் அஜித்தைப் பொறுத்தவரையில் சிறந்த மனிதர். அவரது படம் பாதிக்காத அளவில் விஸ்வாசம் பட வெளியீட்டை சற்று தள்ளிவைக்கலாம். அல்லது, முன்கூட்டியே அதிக தியேட்டர்களில் வெளியிட்டு ரஜினியின் பேட்ட படத்திற்கு வழிவிடலாம் என்று நினைத்தாலும் சிலர் குறுக்கே நிற்பதால் அது தடைபடுகிறது. ஆனாலும் நாங்கள் இக்கோரிக்கையை வைக்க இருக்கின்றோம்’ என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ரஜினி படம் என்பது மற்றவர்களைவிட அதிக ஆடியன்ஸை கொண்ட படமாக இருப்பதால் லாபம் அதிகமாக கிடைக்கும். அதனால் எங்களுக்கு மட்டுமல்ல, சினிமா தொழிலுக்கும் நல்லது. எனவே ரஜினி படத்துக்கு முக்கியத்துவம் கிடைப்பதை தவிர்க்க முடியாது’ என்கிறார் அவர்.
இதில் பல தியேட்டர் அதிபர்கள் ஏற்கனவே அஜீத் படத்திற்காக ‘அட்வான்ஸ் புக்கிங்’ செய்திருந்தார்கள். தற்போது அஜீத் படத்தை தவிர்க்க முடியாமலும், பேட்ட படத்தால் கிடைக்கும் வருமானத்தை தவிர்க்க முடியாமலும் விழி பிதுங்குகிறார்கள். தியேட்டர் அதிபர்களே விஸ்வாசம் தள்ளிப் போவதை விரும்புவதாக வரும் தகவல்களை விஸ்வாசம் படக் குழு ஏற்குமா? அல்லது பொங்கலன்று ரிலீஸ் செய்து காட்டுவார்களா? என்பது போகப் போகத் தெரியும்.
திராவிட ஜீவா