Advertisment

லெஜன்ட்... ஆளே மாறிட்டாரு... இந்த தமிழ் சினிமா ஹீரோவை தெரியுதா?

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணன், திங்கள்கிழமை (ஜூன் 24) தனது இரண்டாவது படத்தை சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Legend Saravanan is acting in a new film directed by Durai Senthilkumar

புதிய தோற்றத்தில் லெஜெண்ட் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகிவருகின்றன.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளரான சரவணன், 2022 ஆம் ஆண்டு வெளியான 'தி லெஜண்ட்' திரைப்படத்தின் மூலம் திரைப்படத் துறையில் ஹீரோவாக நுழைந்தார். இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்து பலதரப்பட்ட விமர்சனங்கள் மற்றும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தனது அடுத்த திட்டம் குறித்த விவரங்களை பகிர்ந்துவருகிறார். இதற்கிடையில் திங்கள்கிழமை (ஜூன் 24) அவர் தனது இரண்டாவது படத்தை சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisment



அந்த வகையில், லெஜண்ட் சரவணன் இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து 'லெஜண்ட் 02' படத்திற்காக நடிக்கிறார். நடிகர் இன்று படத்தின் தொடக்க விழாவிலிருந்து திரைக்குப் பின்னால் உள்ள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும், திரைப்படத்திற்கான தனது புதிய தோற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

துரை செந்தில்குமார் சமீபத்தில் சூரி, சசிகுமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கருடன்’ படத்தை இயக்கி இருந்தார். இதற்கிடையில், லெஜண்ட் 02' ஒரு பெரிய அளவிலான பொழுதுபோக்குப் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment