காசி விஸவநாதர் கோவில் மற்றும் கங்கை நதி தூய்மை குறித்து பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷால் வெளியிட்ட ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.
இந்தியாவில் பழம்பெரும் ஆன்மீக தளங்களின் ஒன்றாக வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் கங்கை நதி உலக புகழ் பெற்றது. பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பின், கங்கை நதி மற்றும் காசி விஸ்வநாதர் கோவிலை மேம்படுத்தும் பணிகளை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து தற்போது காசி விஸ்வநாதர் கோவிலுக்கு பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் தனது குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா சென்ற நடிகர் விஷால், இந்த பயணத்தின் ஒரு பகுதியாக வாரணாசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார். இது குறித்து தனது ட்வி்ட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த விஷால், அன்புள்ள மோடிஜி , நான் காசிக்குச் சென்று, அற்புதமான தரிசனம்/பூஜை செய்து, கங்கா நதியின் புனித நீரைத் தொட்டேன் . கோயிலை புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாகவும் எவரும் வகையில் காசி தரிசனம் செய்வதன் மூலம் நீங்கள் செய்த மாற்றத்திற்காக கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக . உங்களை தலைவணங்குகிறேன். வணக்கம் என்று பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், தற்போது விஷாலின் ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil