விக்ராந்த் மாஸியின் ‘தி சபர்மதி ரிப்போர்ட்’: மோடி ஆதரவு: ‘போலி கதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும்’

விக்ராந்த் மாஸி நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும், ‘போலி கதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும், இறுதியாக உண்மை வெளிவரும்’ என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

விக்ராந்த் மாஸி நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும், ‘போலி கதைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும், இறுதியாக உண்மை வெளிவரும்’ என்றும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Sabarmati report modi

விக்ராந்த் மாஸி நடித்துள்ள ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். (Photo: Vikrant Massey/Instagram, Express photo)

பிப்ரவரி 27, 2002 அன்று நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை மையமாகக் கொண்ட விக்ராந்த் மாஸியின் சமீபத்திய திரைப்படமான ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படத்தை பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளத்தில் பாராட்டினார். குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, அந்த சோகமான நிகழ்வின் நேரம், படம் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், "உண்மை வெளிவருகிறது" என்று எழுதினார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Prime Minister Narendra Modi supports Vikrant Massey-starrer The Sabarmati Report: ‘Fake narrative can persist only for limited time’

படத்தைப் பாராட்டி ஒரு பதிவை மறு ட்வீட் செய்த மோடி, “நன்றாகச் சொன்னீர்கள். இந்த உண்மை வெளிவருவது நல்லது, அதுவும் சாமானியர்கள் பார்க்கும் வகையில் வருவது நல்லது. ஒரு போலியான கதை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே நீடிக்கும். இறுதியில், உண்மைகள் எப்போதும் வெளிவரும்!” என்று கூறினார்.

கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸின் S6 பெட்டியில் தீப்பிடித்து 59 பயணிகள் கொல்லப்பட்ட பயங்கர சம்பவத்தின் பின்விளைவுகளை சபர்மதி ரிப்போர்ட் ஆராய்கிறது. பலியானவர்களில் பெரும்பாலானோர் ராமர் கோயில் இயக்கத்தில் பங்கேற்றுவிட்டு அயோத்தியில் இருந்து திரும்பிய கரசேவகர்கள். இந்தப் பெரும் விபத்தைத் தொடர்ந்து குஜராத்தில் 2002-ம் ஆண்டு வகுப்புக் கலவரம் ஏற்பட்டது.

Advertisment
Advertisements

2022-ம் ஆண்டில், வெளியான விவேக் அக்னிஹோத்ரியின் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை பிரதமர் மோடி பாராட்டினார், இந்த படம் அம்மாநிலத்தில் தீவிரவாதம் உச்சக்கட்டத்தில் இருந்தபோது காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து காஷ்மீரி இந்துக்கள் பெருமளவில் வெளியேறியதை அடிப்படையாகக் கொண்டது.

‘தி சபர்மதி ரிப்போர்ட்’ வெள்ளிக்கிழமை வெளியானதிலிருந்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் நிலையான வளர்ச்சியைக் கண்டது. இது ரூ 1.25 கோடியுடன் தொடங்கியது. சனிக்கிழமை வசூலில் 68 சதவீதம் உயர்ந்து ரூ 2.1 கோடியை ஈட்டியது. இதனால், இந்தியாவில் மொத்த வசூல், வெளியான இரண்டு நாட்களில் ரூ.3.35 கோடியாக உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
PM Narendra Modi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: