இந்தியா பெருமிதம் கொள்கிறது: ஆஸ்கார் வெற்றிக்கு மோடி வாழ்த்து
இந்தியாவின் ‘The Elephant Whisperers’ மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை வென்றதற்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, இன்று (மார்ச் 13) நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் ‘The Elephant Whisperers’ என்கிற ஆவணப்படம் மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது.
Advertisment
ஆஸ்கர் விருது பட்டியலில், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில், ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடல் வெற்றியடைந்துள்ளது. இதற்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ்க்கு வாழ்த்து தெரிவித்து, பிரதமர் மோடி கூறியதாவது: "‘நாட்டு நாட்டு’ புகழ் உலகளாவியது. இன்னும் பல வருடங்கள் நினைவில் நிற்கும் பாடலாக இது இருக்கும். ஆஸ்கர் விருதை வென்றதற்கு, இந்தியா பெருமிதம் கொள்கிறது", என்றார்.
மேலும், சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருது வென்ற 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படக்குழுவுக்கு பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதைப்பற்றி, "இயற்கையோடு இயைந்து வாழ்வதன் முக்கியத்துவத்தை 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' படம் அற்புதமாக உணர்த்துகிறது", என்று பிரதமர் புகழ்ந்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil