பிற மொழி நடிகரை தாக்கிய வழக்கில் போலீஸ் புகார் அளித்துள்ள நிலையில், நடிகர் விமல் தலைமறைவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Advertisment
களவாணி, தூங்காநகரம், வாகைசூடவா, கலகலப்பு, கேடிபில்லா கில்லாடி ரங்கா மன்சப்பை, மாப்ள சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். முன்னணி நடிகராக அவர் சிரமப்பட்டு வருகிறார்.
நடிகர் விமல் மீது போலீஸ் புகார்
இந்நிலையில் சென்னை விருகம்பாகத்தில் தங்கி படம் ஒன்றில் நடித்து வரும் கன்னட நடிகர் அபிஷேக், நேற்று தனது அபார்ட்மெட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கே குடிபோதையில் தனது நண்பர்களுடன் சென்ற விமலுக்கும் அபிஷேக்கிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிப்போய் விமல் அபிஷேக்கை தாக்கியுள்ளார். இதையடுத்து அபிஷேக் போலீஸில் புகார் அளித்ததையடுத்து போலீஸார் விமல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் போலீஸ் வழக்கின் காரணமாக தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபக் காலங்களாகவே குடிப் பழக்கத்தால் சினிமா கனவுகளை பலரும் இழந்து வருகின்றனர். தற்போது குடிபோதையினால் இப்படி ஒரு சர்ச்சையில் இவர் சிக்கியுள்ளது திரையுலகினர் சிலரிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.