Advertisment

பொங்கல் பாக்ஸ் ஆபிஸ் மோதல்: தனுஷின் கேப்டன் மில்லர் vs சிவகார்த்திகேயனின் அயலான்

இந்த வார இறுதியில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி படங்கள் மோதுகின்றன. 

author-image
WebDesk
New Update
Captain Miller Ayalan

தனுஷின் கேப்டன் மில்லர் vs சிவகார்த்திகேயனின் அயலான்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

இந்த வார இறுதியில் தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், விஜய் சேதுபதி படங்கள் மோதுகின்றன.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Pongal box office clash: Dhanush’s Captain Miller and Sivakarthikeyan’s Ayalaan take up maximum screens in Tamil Nadu 

பொங்கல் பண்டிகை வந்துவிட்டது. தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜய்யின் மிஷன்: சாப்டர் 1 மற்றும் விஜய் சேதுபதி-கத்ரீனா கைஃப் நடித்துள்ள மெரி கிறிஸ்மஸ்' போன்ற படங்கள் வெளியாகி தமிழ்த் திரையுலகம் மகிழ்ச்சியாகக் கொண்டாட உள்ளது. ஆனால், கோலிவுட்டில் வலுவாக காலடி எடுத்து வைத்திருக்கும் நான்கு நட்சத்திரங்களின் படங்கள் வெளியாக இருந்தாலும், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய படங்கள் ரிலீஸுக்கு முன்பே கவனத்தைப் பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் இந்த நான்கு படங்களின் திரையரங்கு விநியோகத்தில், கேப்டன் மில்லர் படத்துக்கு 450 தியேட்டர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதே எண்ணிக்கையில் அயலான் படத்துக்கும் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அருண் விஜய்யின் மிஷன்: சாப்டர் 1-ஐப் பொறுத்தவரை, தமிழகத்தில் சுமார் 150-200 திரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

கேப்டன் மில்லர், வன்முறை சார்ந்த ஒரு பீரியட் திரைப்படம், இந்த படம் தனுஷை ஒரு ராணுவ வீரராகக் காட்டுகிறது. இந்த படத்தின் வன்முறைக் காட்சிகள் சி.பி.எஃப்.சி-யின் கவனத்தை ஈர்த்ததால், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பல காட்சிகளை நீக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். மறுபுறம், ஆர். ரவிக்குமார் இயக்கியுள்ள அயலான் திரைப்படம், ஒரு நகைச்சுவையான குடும்ப நட்பு அறிவியல் புனைகதை திரைப்படம். 

சினிமா வர்த்தக ஆய்வாளரும் திரைப்படத்துறை  நிபுணருமான ரமேஷ் பாலா கூறுகையில், இரண்டு படங்களும் கணிசமாக வேறுபட்ட பார்வையாளர்களைக் கொண்டுள்ளன, எனவே அவை ஒன்றுக்கொன்று வியாபாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறினார்.

ரமேஷ் பாலா கூறுகையில், “அயலான் குழந்தைகளுக்கான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம், கேப்டன் மில்லர் ஒரு ஆக்‌ஷன் படம். எனவே திரையரங்குகளின் எண்ணிக்கை மற்றும் பாக்ஸ் ஆபிஸ் ஆகியவற்றின் அடிப்படையில், இரண்டும் சமமான திறனைக் கொண்டுள்ளன. சரியாக இருக்க, நாங்கள் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பார்க்க விரும்புகிறோம். இது 6 நாட்கள் கொண்ட வார இறுதி. அதனால், இரண்டு படங்களுக்கும் போதிய பார்வையாளர்கள் இருக்கப்போகிறார்கள். இரண்டு படங்களும் நம்பர் ஒன் ஆகலாம்.” என்று கூறினார்.

மேலும், “திரையரங்குகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை அருண் விஜய்யின் மிஷன் மூன்றாவது படமாக இருக்கும். விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்மஸ் ஒரு டப்பிங் படமாக இருக்கும். இந்த படம் மல்டிபிளக்ஸ்களில் மட்டும் இருக்கும், குறிப்பாக கத்ரீனா கைஃப் மற்றும் ஸ்ரீராம் ராகவன் இங்கு குறைந்த பார்வையாளர்களைக் கொண்டுள்ளனர். எனவே, பாக்ஸ் ஆபிஸில் மெல்ல மெல்ல வளரும்” என்று கூறினார்.

பாக்ஸ் ஆபிஸ் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, கேப்டன் மில்லர் மற்றும் அயலான் ஆகிய 2 படங்களும் ரூ 100 கோடி வசூல் கிளப்பில் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையைச் சேர்ந்த வர்த்தக நிபுணர் ஸ்ரீதர் பிள்ளை, ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில் மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் மிஷன்: சாப்டர் 1 படங்கள் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுடன் தொடர்புடையதாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார்.

“கேப்டன் மில்லர், அயலான், அருண் விஜய்யின் மிஷன் மற்றும் மெரி கிறிஸ்துமஸ், இந்த நான்கு படங்களுமே மிகவும் பரபரப்பானவை. நிச்சயமாக, கேப்டன் மில்லர் மற்றும் அயலான் இரண்டு பெரிய நட்சத்திரங்களின் படங்கள், முதல் இடத்தைப் பிடிக்கும், இந்த படங்கள் நல்ல முடிவுகளைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்புகள் உள்ளன. மற்ற இரண்டு படங்களும் மல்டிபிளக்ஸ்களில் நன்றாக ஓடும்” என்று கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dhanush
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment