/tamil-ie/media/media_files/uploads/2020/01/template-86.jpg)
pongal. pongal2020, pongal celebration, rajinkanth, soundarya rajinikanth, kattil movie, shrusti donge, pongal , jallikattu, madurai, பொங்கல்,, பொங்கல் கொண்டாட்டம், ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த், விசாகன், கட்டில், சிருஷ்டி டாங்கே
தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படுகிறது.
ரஜினி – கமலின் கலவையே தனுஷ் – தெறிக்கும் பட்டாஸ்...
இந்த பொங்கல் திருநாளை திரையுலகினரும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். அவற்றுள் சிலவற்றை இங்கு காண்போம்
நடிகர் ரஜினிகாந்தின் மகளும், திரைப்பட தயாரிப்பாளருமான சவுந்தர்யா - விசாகன் தம்பதியினரின் பொங்கல் கொண்டாட்டம்
பிரசன்னா - சினேகா தம்பதியினரின் பொங்கல் கொண்டாட்டம்
"கட்டில்" திரைப்படத்தின் படக்குழுவினர் , படப்பிடிப்பு தளத்திலேயே பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து படத்தின் இயக்குநர் கணேஷ் பாபு கூறுகையில், “உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்த பண்டிகையை "கட்டில்" படத்தின் கதாநாயகியாக நடிக்கும் மும்பை பெண் சிருஷ்டி டாங்கே மற்றும் படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு” என்றார்.
/tamil-ie/media/media_files/uploads/2020/01/kattil-1-300x200.jpg)
பொங்கல் கொண்டாட்டத்தையொட்டி மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.