/tamil-ie/media/media_files/uploads/2022/01/Screenshot-62.jpg)
Pongal festival celebration in bigg boss house
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இறுதி நாளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. எப்போதும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரையில், கோப்பையை வெல்வது யார் என்பது சில நாட்களிலே ரசிகர்கள் கணித்து விடுவார்கள். தங்களின் ஃபேவரைட் போட்டியாளருக்காக சமூக வலைதளங்களில் ஆர்மிக்களை தொடங்கி ஆதரவு அளிப்பார்க்கள்.
ஆனால் இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சி சற்று வித்தியாசமாக இருக்கிறது. புதிய அறிமுகமில்லாத போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த பிக்பாஸ் போட்டியில் வெல்ல போவது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
மற்ற 4 சீசன்களை போல காதல், அன்பு கேங், பாய்ஸ் கேங் இல்லாமல் இந்த சீசன் தனித்துவமாக இருக்கிறது. அதற்கு காரணம் வீட்டிலுள்ள அனைவரும் அவரவர் விளையாட்டை அவரவர் விளையாடுவது தான்.
பிக்பாஸ் போட்டியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்களாக நடன இயக்குனர் அமீர் மற்றும் நடிகர் சஞ்சீவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இதில் அமீர் டிக்கெட் டூ ஃபினாலி டாஸ்கில் வெற்றி பெற்று, முதல் ஃபைனலிஸ்ட் ஆக, சஞ்சீவ் வந்த மூன்று வாரத்திலேயே வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இறுதியாக கடந்த வாரம் தாமரை பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். இப்போது நிரூப், பிரியங்கா, ராஜூ, பாவனி, அமீர் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் வீட்டில் இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த அதிர்ஷ்டசாலி யார் என்பது விரைவில் தெரிந்து விடும்.
இது போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் வீட்டின் கடைசி வாரம். இதனால் இந்த வாரத்தில் போட்டியாளர்கள் டாஸ்க் எதுவும் இல்லாமல், வீட்டில், ஜாலியாக இருக்கின்றனர். இதற்கிடையே, இறுதி சுற்றுக்குள் நுழைந்த போட்டியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, இந்த சீசனில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரோமோ வெளியாகியுள்ளது. அதில் இறுதி போட்டியாளர்கள் உள்பட போட்டியில் கலந்து கொண்ட அனைவரும் பொங்கல் வைத்து, கடவுளை வணங்கி பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
இதோ அந்த புரோமோ வீடியோ!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us